இண்டிகோ விமானத்திற்கு என்னதான் ஆனது..? விமானத்தின் உள்ளே பறந்து பறந்து அதகளம் செய்த புறா..!
A pigeon flew inside an Indigo flight and made a mess
விமானிகளுக்கான புதிய நேர கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலாக ஆயிரக்கணக்கான இண்டிகோ நிறுவனம் ரத்து மற்றும் தாமதம் என கடும் சிக்கலை சந்தித்துள்ளது. விமானிகள் இல்லாததன் காரணமாக நாடு முழுவதும் அதன் சேவைகள் முடங்கி போயுள்ளன.
போதிய விமானிகள் இல்லாதது, தொடர்ச்சியாக விமான சேவைகள் ரத்து, மத்திய அரசின் நடவடிக்கை என கடும் சிக்கலில் இருக்கும் இண்டிகோ நிறுவனத்திற்கு மேலும் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதாவது இண்டிகோ விமான பயணத்தின் போது, உள்ளே புறா ஒன்று அங்கும், இங்கும் பறந்தோடி பயணிகளை பீதிக்கு உள்ளாக்கியுள்ளது. பெங்களூருவில் இருந்து வதோதராவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
விமானத்தில் உள்ள புறாவை பிடிக்க விமான பணியாளர்கள் முயன்ற போதும், அது அங்கும், இங்கும் பறந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்ட பயணிகள் ஒருவர் இந்த காட்சியை தமது செல்போனில் வீடியோவாக பதிவேற்றியதோடு, அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து, இண்டிகோ நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு கருத்துகளையும், விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர். ஒரு சாரார் இந்த இண்டிகோவுக்கு என்னதான் ஆனது..? இதற்கு மட்டுமே ஏன் இப்படி நடக்கிறது? என்ற அனுசரனையான கருத்துகளையும் பகிர்ந்துள்ளனர்.
English Summary
A pigeon flew inside an Indigo flight and made a mess