'அதிசயம் ஆனால் உண்மை': கர்நாடகாவில் நீல நிறத்தில் முட்டையிட்ட நாட்டு கோழி; இணையத்தில் வைரல்..!
A native hen in Karnataka lays blue eggs
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம், சென்னகிரி தாலுகா, நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சையத் நுார். இவரது வீட்டில் வளர்த்த ஒரு நாட்டு கோழி ஒன்று நீல நிறத்தில் முட்டை போட்டுள்ளது. இதனை அந்த ஊர் மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.
வீட்டில் கோழிகள் வளர்த்து வரும் சையத் நுாரிடம் 10 நாட்டு கோழிகள் உள்ளன. அதன் முட்டைகளை அவர் விற்பனை செய்கிறார். இந்நிலையில் முட்டைகளை எடுக்க, கோழிகள் கூடுக்கு சென்ற போது நாட்டு கோழிகளில் ஒன்று, வெள்ளை நிறத்துக்கு பதிலாக, நீல நிறத்தில் முட்டையிட்டுள்ளது. இதை பார்த்த அவர், உடனடியாக, கால்நடை துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர்களும் விரைந்து வந்து நீல நிற மமுட்டையை பார்த்து ஆச்சரியமடைந்ததோடு,முட்டை நீல நிறத்தில் இருப்பதற்கு என்ன காரணம் என்று ஆய்க்கு அனுப்பியுள்ளனர். குறித்த முட்டை மேற்புற ஓடு மட்டுமே நீல நிறத்தில் உள்ளதாகவும், உட்புறத்தில் வழக்கமான நிறத்தில் உள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கிடையே நீல நிற முட்டையை சிலர் செல்போனில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் அது வைரலாகியுள்ளது.
இதுகுறித்து சன்னகிரி கால்நடை பராமரித்துறை உதவி இயக்குனர் அசோகா கூறுகையில், இவ்வாறு நீல நிறத்தில் கோழி முட்டை இருப்பதற்கு, மெடுசில் உள்ள பிலிவர்டின் எனப்படும் நிறமி காரணமாக இருக்கலாம் என்றும், முட்டையின் மேல் பகுதி ஓடு மட்டுமே நீல நிறத்தில் இருக்கும். உள்பகுதியில் வெள்ளை, மஞ்சள் கரு இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், முதல்முறையாகதான் கோழி நீல நிறத்தில் முட்டையிட்டுள்ளது. தொடர்ந்து நீல நிற முட்டையிடும் பட்சத்தில் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
A native hen in Karnataka lays blue eggs