ஜாமீனில் வெளியே வந்த சேலம் குற்றவாளி: நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கூட்டுப்பலாத்காரம்: குஜராத்தில் ஆற்றில் வீசி கொல்ல முயன்ற கொடூரம்..! - Seithipunal
Seithipunal


குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் சிறையிலிருந்து வெளியே வந்த கணவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கொடூரமாகத் தாக்கியுள்ளதோடு,கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரை தாபி ஆற்றில் வீசிக் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்த 35 வயதான கணேஷ் ராஜ்புத் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன், ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் தனது மனைவிக்கு வேறொரு நபருடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு, மனைவியை கம்பு மற்றும் சுத்தியலால் சரமாரியாக தாக்கியுள்ளார். அத்துடன், மறுநாள் காலை, அவரும் அவரது கூட்டாளி மகேஷும் சேர்ந்து அப்பெண்ணைக் கடத்தி, ஒரு வாடகை அறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு வைத்து இருவரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், இரும்புக் குழாயால் தலையில் தாக்கியுள்ளனர். பின்னர், மேலும் இரண்டு நண்பர்களை வரவழைத்து, நால்வரும் சேர்ந்து அப்பெண்ணின் கை, கால்களைக் கட்டி தாபி ஆற்றில் வீசிக் கொல்ல முயன்றுள்ளனர். 

படுகாயங்களுடன் தப்பிய அந்தப் பெண், கபோதரா காவல் நிலையத்தை அடைந்து புகார் அளித்துள்ளார். குறித்த புகாரின்அடிப்படையில், கூட்டுப் பலாத்காரம் மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த கபோதரா காவல்துறையினர், குற்றவாளிகள் நால்வரையும் கைது செய்துள்ளனர்.

பெண்ணின் கணவனான கணேஷ் ராஜ்புத், தமிழ்நாட்டின் சேலம் பகுதியில் ஓட்டுநராக பணிபுரிபவர். அவர் மீது ஏற்கனவே சூரத்தில் 26 கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன நிலையில் மீண்டும் கைதாகியுள்ளார். ஏனைய குற்றவாளிகள் உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. 

கைது நடவடிக்கையை உறுதிப்படுத்திய துணை ஆணையர் அலோக் குமார், இவ்வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A man released from prison along with his friends gang raped his wife and tried to kill her by throwing her into a river in Gujarat


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->