பாட்னாவில் பிரதமர் மோடி தேஜ கூட்டணிக்கு ஆதரவாக பிரமாண்ட ரோடு ஷோ; உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள்..!
A grand road show in support of Prime Minister Modis Janata Dal in Patna
பீஹார் சட்டசபை தேர்தலில், தேஜ கூட்டணிக்கு ஓட்டளிக்குமாறு பாட்னாவில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் திரண்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணியில் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 243 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடக்கிறது. வரும் 06-இல், முதல் கட்டமாக, 121 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பீஹாரில் அணைத்து கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
பிரதமர் மோடி போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ராவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஈடுப்பட்டார். அப்போது, அவர் காங்கிரஸ், ஆர்ஜேடி பீஹாரின் அடையாளத்தை அழிக்க விரும்புகின்றன என குற்றம் சாட்டியுள்ளார்.

மறுபுறம், தேஜ கூட்டணிக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முசாபர்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டார். அவர், லாலு பிரசாத் தலைமையிலான ஆர்ஜேடி கட்சியை கடுமையாக சாடி பேசியுள்ளார். இன்னொருபுறம் பெகுசராய் பகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதோடு, குளத்தில் குதித்து பிரதேச மக்களுடன் இணைந்து மீன்பிடித்து ஓட்டு கேட்டுக்கொண்டுள்ளார்.
காலை முதல் பரபரப்பாகவே பீஹார் தேர்தல் களம் இருந்தது. மாலையில் தேஜ கூட்டணிக்கு ஓட்டளிக்குமாறு பாட்னாவில் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு-ஷோ நடத்தினார். இதன் போது சாலையின் இருபுறமும் திரண்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். திறந்தவெளி வாகனத்தில் தாமரை சின்னத்தை காட்டியவாறு, மக்கள் அனைவரும் தேஜ கூட்டணிக்கு ஓட்டளிக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
English Summary
A grand road show in support of Prime Minister Modis Janata Dal in Patna