ஆதரவற்றோர் இல்லத்தில்., மயக்கமருந்து கொடுத்து.. கொடூரமான முறையில் சிறுமி பலாத்காரம்.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகில் மேட்சல் மாவட்டத்தில் வேணுகோபால் என்பவரின் நன்கொடையில் மாருதி ஆதரவற்றோர் இல்லம் நடந்து வந்தது. அங்கே நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகள் தங்கி இருக்கின்றனர். இந்த ஆதரவற்றோர் இல்லத்தை விஜயா என்ற பெண்மணி நிர்வாகம் செய்து வருகின்றார். 

அங்கே, ஒரு பதினான்கு வயது சிறுமியை அடைத்து வைத்து ஒரு வருடகாலமாக அந்த இல்லத்தின் நன்கொடையாளர் வேணுகோபால் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அந்த சிறுமி வறுமை காரணமாக அவரின் மாமா வீட்டிற்கு அவரின் பெற்றோர்களால் கொண்டுவந்து விடப்பட்டார். 

பின்னர், அவரின் மாமாவால் அனாதை இல்லத்தில் அந்த சிறுமி சேர்க்கப்பட்டுள்ளார். அந்த சிறுமி அங்கே செல்ல மறுத்தபோது அவரது மாமாவால் அடித்து துன்புறுத்தப்பட்டு பின் அந்த இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அந்த சிறுமி அங்கே சேர்க்கப்பட்ட நாள்முதல் அடிக்கடி வந்து செல்லும் வேணுகோபால் அந்த சிறுமிக்கு மயக்கமருந்து கலந்த பாலை கொடுத்து அவரை மயங்கச்செய்து ஒருவருடமாக பலாத்காரம் செய்து வந்துள்ளார். 

இதுபோல அங்கே பலபெண்கள் சீரழிக்கப்படுகின்றனறாம். இது பற்றி அந்த இல்லத்தின் காப்பாளரிடம் தெரிவித்தபோது அந்த சிறுமி மேலும் கொடுமைப்படுத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். ஆகவே, அங்கிருந்து தப்பித்து தன்னுடைய அத்தை வீட்டிற்கு வந்து அவரின் அத்தையிடம் நடந்ததைக்கூறியுள்ளார். உடனே அவரின் அத்தை காவல்துறையில் புகாரளித்தார். எனவே காவல்துறையினர் இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

a child girl rapped in Home for the destitute


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->