வற்புறுத்திய கணவன் வராத மனைவி., மகளை அழைத்துச் சென்று வெறியை தீர்த்த கொடூரம்.!  - Seithipunal
Seithipunal


குடும்பம் நடத்த அழைத்து மனைவி வராத காரணத்தால் தனது 7 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் உதய்பூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த டெம்போ ஓட்டும் கணவர் தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்த காரணத்தால் அவர் தன்னுடைய ஏழு வயது மகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று தங்கிவிட்டார். இதனால், அந்த கணவன் மட்டும் தனித்து வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில், தன்னுடைய மனைவி மற்றும் மகளை காண கடந்த திங்கட்கிழமை அன்று மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது அவருடைய மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அவரது மனைவி மறுத்து சண்டையிட்டுள்ளார். இரவு வெகுநேரம் ஆகியதால் தன்னுடைய மகளை மட்டும் அழைத்துக்கொண்டு டெம்போவில் தூங்குவதற்காக சென்றுள்ளார். 

அப்பொழுது அந்த 36 வயது காம கொடூரன் மகள் என்றும் பாராமல் 7 வயது சிறுமியை டெம்போவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து இருக்கின்றான். இதனால், சிறுமி மயங்கி இருக்கின்றார்  பின்னர் மகளை வீட்டில் போட்டுவிட்டு டெம்போவில் புறப்பட்டு சென்றுவிட்டார். 

மகள் மயக்கமாக இருப்பதை கண்டு பதறிய தாய், விசாரித்த பொழுது தந்தை பலாத்காரம் செய்ததை கூறியதால் அதிர்ச்சி அடைந்த தாய், காவல் நிலையத்திற்கு சென்று தன்னுடைய கணவர் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், அவரது கணவரை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 years old girl rapped by her father 


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal