சூர்யா பட பாணியில் கடத்தல்! திக்குமுக்காடிய அதிகாரிகள்! - Seithipunal
Seithipunal


கேரளத்திற்கு சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகிறது. இதனால் கேரள மாநிலத்தில் கொச்சின் விமான நிலையம் அடுத்தபடியாக இந்த விமான நிலையம் மிகவும் பரபரப்பாக திகழ்கிறது. 

இந்த விமான நிலையத்திற்கு அரபு நாடுகளில் இருந்து விமானம் வருவதால் அங்கிருந்து தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. 

சுங்கத்துறை அதிகாரிகள் அதனை கண்காணிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்த விமானங்களில் பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

தகவலின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை மேற்கொண்டு வந்தனர். சோதனையின் போது தங்கம் கடத்தி வந்த 6 பயணிகள் சிக்கினர். 

துபாயில் இருந்து வந்த கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த முகமது மித்லாஜ் (வயது 21) என்பவர் அவரது பையில் தாள் வடிவில் 985 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தார். அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இதே போன்று கொடுவள்ளி பகுதியைச் சேர்ந்த பஷீர் (வயது 40) கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த அஜீஸ் (வயது 45) மலப்புரத்தைச் சேர்ந்த சமீர் (வயது 34) உள்பட 5 பேரும் கேப்சூலுக்குள் தங்கத்தை வைத்து அதனை விழுங்கி வயிற்றுக்குள் மறைத்து வைத்திருந்தனர். 

அதிகாரிகள் அவர்களது வயிற்றை ஸ்கேன் செய்த போது குடலுக்குள் கேப்சூல் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவர்களை சோதனை செய்த போது கேப்சூலுக்குள் தங்கம் இருந்தது தெரிய வந்தது. 

அவர்களிடம் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் மொத்தம் 5. 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.3கோடி ஆகும். மேலும் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 passengers arrested gold smuggling case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->