செப்டம்பர் 03,04-இல் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: என்ன என்ன பொருட்களுக்கு ஜி.எஸ்.டி குறைக்கப்படும்..?
56th GST Council meeting to be held in Delhi on September 3rd and 4th
கடந்த 2017, ஜூலை 01ந் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அறிமுகம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டு வரும் நோக்கில் இந்த ஜி.எஸ் .டி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பில் இதைக் கண்காணிக்கவும், வட்டி நிர்ணயம் தொடர்பான முடிவுகளை எடுக்கவும் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது.
இந்த கவுன்சிலின் தலைவராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளார்.இதில் அணைத்து மாநிலங்களின் நிதி ஆமைச்சர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது, ஜி.எஸ்.டி. 05 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 04 அடுக்குகள் கொண்டதாக இருக்கிறது.

இதில், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பூஜ்யம் அல்லது 05 சதவீத வரி அடுக்கிலும், ஆடம்பர பொருட்கள் மற்றும் புகையிலை போன்ற பாவ பொருட்கள் 28 சதவீத வரி அடுக்கிலும் வருகின்றன. நாட்டின் 79-வது சுதந்திர தின நிகழ்வின் போது, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய கொடியேற்றிய பின் தீபாவளிக்குள் ஜி.எஸ்.டி. கணிசமாக குறைக்கப்படும் என்று கூறினார்.
இந்நிலையில், 56-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தலைநகர் டெல்லியில் வரும் செப்டம்பர் 03, 04-ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது, ஜவுளி பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், காலணி மீதான ஜி.எஸ்.டி.யும் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
56th GST Council meeting to be held in Delhi on September 3rd and 4th