'பதவி நீக்க தீர்மானம் வெட்கக்கேடான முயற்சி'; நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக முன்னாள் நீதிபதிகள் 56 பேர் கையெழுத்து..!
56 former judges sign in support of Justice Swaminathan
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக இண்டி கூட்டணி கொண்டு வரப்பட்ட பதவி நீக்க தீர்மானம், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது,'' என உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் 56 பேர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை பாராளுமன்றத்தில்கொண்டு வர வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 107 எம்பிக்கள் கையெழுத்திட்ட நோட்டீஸ் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், ஆதர்ஷ் கோயல், ஹேமந்த் குப்தா, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் சுப்ரமணியன், சிவஞானம், சுதந்திரம் உள்ளிட்ட 56 எம்பிக்கள் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; பதவி நீக்க தீர்மானம் கொண்டுவருவதற்கான நடவடிக்கையானது, சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவின் சித்தாந்தம் மற்றும் அரசியல் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போகாத நீதிபதிகளை வசைபாடுவதற்கான வெட்கக்கேடான முயற்சி. இது போன்ற நடவடிக்கைகள் தொடர அனுமதிக்கப்பட்டால், அது நமது ஜனநாயகத்தின் வேர்களையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் வெட்டிவிடும்.
எம்பிக்கள் குறிப்பிடப்பட்ட காரணங்கள் மேலோட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும், பதவி நீக்கம் போன்ற அரிய, விதிவிலக்கான மற்றும் தீவிரமான அரசியலமைப்பு நடவடிக்கையை எடுப்பதற்கு நியாயப்படுத்த அவை முற்றிலும் போதுமானவை அல்ல.
அவசர நிலையின் போதும் கூட அப்போதைய அரசு, எல்லையை மீற மறுத்த நீதிபதிகளை தண்டிக்க பல்வேறு வழிமுறைகளை ஏற்றுக் கொண்டது என்பதை நினைவில் கொள்ளலாம். பதவி நீக்க நெறிமுறையின் நோக்கமே நீதித்துறையின் நேர்மையை நிலைநிறுத்துவதே தவிர, பழிவாங்கும் கருவியாக மாற்றுவது அல்ல.
நீதிபதிகளை , தங்களது அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க வேண்டும் என கட்டாயப்படுத்தும் வழிமுறையாக பதவி நீக்கம் என்ற அச்சுறுத்தலைப் பயன்படுத்துவது அரசியலமைப்பு பாதுகாப்பையே மிரட்டும் கருவியாக மாற்றுவதாகும். அத்தகைய அணுகுமுறை ஜனநாயகத்துக்கும் அரசியலமைப்புக்கும் விரோதமானது. '' என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ள போட்டுள்ள 56 முன்னாள் நீதிபதிகள் பின்வருமாறு;
சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆதர்ஷ் கோயல்
சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஹேமந்த் குப்தா
ராஜஸ்தான் ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி அனில் தியோ சிங்
பாட்னா ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி நரஷிம்ம ரெட்டி
பாட்னா ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பஜன்த்ரி.
கர்நாடகா ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி கமல் முகர்ஜி
சிக்கிம் ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பெர்மோத் ே காஹ்லி
குஜராத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி பெர்மோத் கோஹ்லி
மபி மற்றும் ராஜஸ்தான்ஐகோர்ட் முன்னாள் நீதிபதி விஷ்ணு எஸ் கோக்ஜே
மும்பை ஐகோர்ட் முன்னாள் நீதிபத அம்பாதாஸ் ஜோஷி.
சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சுப்ரமணியன்
சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சிவஞானம்
சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சுதந்திரம்
டில்லி ஐகோர்ட் முன்னாள் நீதிபதி திங்ரா
டில்லி ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கவுபா.
டில்லி ஐகோர்ட் முன்னாள் நீதிபதி வினோத் கோயல்
டில்லி ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சோப்ரா
டில்லி ஐகோர்ட் முன்னாள் நீதிபதி வித்யா பூஷண் குப்தா
ஜார்க்கண்ட் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ரமேஷ் குமார் மெராதியா
ஜார்க்கண்ட் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி நவல் கிஷோர் அகர்வால்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில ஐகோர்ட முன்னாள் நீதிபதி கரம் சந்த் புரி
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில ஐகோர்ட முன்னாள் ஜஸ்பிர் சிங்
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில ஐகோர்ட முன்னாள் பல்லா
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில ஐகோர்ட முன்னாள் அகர்வால்
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில ஐகோர்ட முன்னாள் தர்ஷன் சிங்.
ராஜஸ்தான் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர் ரத்தோர்
ராஜஸ்தான் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி பிரசாந்த் அகர்வால்
மபி ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ராகேஷ் சக்சேனா
மபி ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கேகே திரிவேதி
மபி ஐகோர்ட் முன்னாள் நீதிபதி எச்பி சிங்.
மபி ஐகோர்ட் முன்னாள் நீதிபதி டி கே பலிவல்
மபி ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சுஷில் கே ஆர் குப்தா
தெலுங்கானா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சிவ சங்கர ராவ்
அலகாபாத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கமலேஷ் வர் நாத்
அலகாபாத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி டிகே சேத்.
அலகாபாத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ராஜேஷ் குமார்
அலகாபாத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சுரேந்தி ரவிக்ரம் சிங் ரத்தோர்
அலகாபாத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி விஜய் லஷ்மி
அலகாபாத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி திரிபாதி
அலகாபாத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி அரோரா.
கர்நாடகா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ராஜேந்தர் பத்மிகெர்
கர்நாடகா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ஸ்ரீநிவாஸ் ஹரிஷ் குமார்
கர்நாடகா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சந்திர சேகர்
கர்நாடகா ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கிருஷ்ணா பட்
குஜராத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி வினீத் கோத்தாரி.
குஜராத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதிரவிக்குமார் ரமேஷ்வர் தயார் திரிபாதி
குஜராத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கே ஏ புஜ்
கேரள ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ரவிந்திரன்
கேரள ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ஹரிஹரன் நாயர்
கேரள ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சிதம்பரேஷ்.
கேரள ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ராமகிருஷ்ணா
கேரள ஐகோர்ட் முன்னாள் நீதிபதி பாலகிருஷ்ணன்
அலகாபாத் மற்றும் உத்தரகாண்ட்ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சுபாஷ் சந்த்
உத்தரகாண்ட் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி லோக்பால் சங்
உத்தரகாண்ட் ஐகோர்ட் முன்னாள் விவேக் சர்மா,
அலகாபாத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ராஜிவ் லோசன் ஆகியோர் இந்த அறிக்கையில் கையெழுத்து போட்டுள்ளனர்.
English Summary
56 former judges sign in support of Justice Swaminathan