ரூ. 1,905 கோடி ஊழல் செய்துள்ள அமைச்சர் நேரு : அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு..!
Minister Nehru has committed Rs 1905 crore corruption alleges Annamalai
நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, அவரது துறையில் ரூ. 1,905 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவையில் அளித்த பேட்டியில் இந்த பகீர் குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.
கடந்த அக்டோபர் 2025-இல் அமைச்சர் நேருவின் துறையில் பணி நியமனத்துக்காக, ரூ.888 கோடி ஊழல் நடந்திருப்பதை அமலாக்கத்துறை சுட்டிக்காட்டி பொறுப்பு டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது. குறித்த கடிதத்தில் 150 பேரை குறிப்பிட்டு வாட்ஸ் அப் உரையாடல்கள், பணம் எப்படி கைமாறியுள்ளது என்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கின்றன என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை என்றும், டிசம்பர் 03-ஆம் தேதி மீண்டும் ஒருமுறை பொறுப்பு டிஜிபிக்கு அமலாக்கத்துறை 258 பக்கம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், நகராட்சி நிர்வாகத்தின் குடிநீர் வழங்கல் துறையில், 1020 கோடி ரூபாய் ஊழல் என்பதற்கான ஆவணத்தை அதில் இணைத்திருந்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்த கடிதத்தில், வாட்ஸ் அப் உரையாடல், ஹவாலா பணத்தை துபாய்க்கு அனுப்பியது போன்ற விவரங்களையும் தந்துள்ளதாகவும், நிறைய வாட்ஸ் அப் உரையாடல்களில் கட்சி நிதி என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த விவரத்தையும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், 'இதில் உண்மை இல்லை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை' என்று நேரு எளிதாக கடந்து சென்றுள்ளார். மறுபடியும் சொல்கிறோம், 888 கோடி ரூபாய் இன்ஜினியர் பதவி நியமனத்திலும், நேரு துறையில் ஒப்பந்ததாரர் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கொடுத்துள்ளனர் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
இன்று அமைச்சர் நேருவின் துறையில் நடந்துள்ள அடுத்துக்கட்ட குளறுபடி. ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறையில் என்று கூறிய அண்ணாமலை, அதில் ஊராட்சி செயலாளருக்கான பதவி நியமனம் நடைபெற்று வருகிறது. இதில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடக்கும். நியாயமாக இன்று அல்லது நாளைக்கு நேர்காணல் நடந்திருக்க வேண்டும். ஆனால், நேற்று மாலை இண்டர்வியூ கேன்சல் என்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

அதாவது, யார் யார் எல்லாம் இண்டர்வியூவுக்கு தகுதியானவர்கள் என்று ஒரு பட்டியலை வெளியிட்டு உள்ளனர். ஆனால், என்ன அடிப்படையில் இந்த பட்டியலை வெளியிட்டனர் என்று யாருக்குமே தெரியவில்லை என்று கூறியுள்ளதோடு, தேர்வானவர்களை விட, தேர்வாகாமல் உள்ள நபர்கள் தகுதியான நபர்களாக உள்ளனர் என்று நிருபர்களிடம் அண்ணாமலை கூறியுள்ளார்.
எதையும் முதல்வர் கண்டு கொண்டதாக தெரியவில்லை என்றும், நேருவும் எதையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை என்றும் குமார் சாட்டியுள்ளார். இன்றைக்கு பொறுப்பு டிஜிபிக்கு பொறுப்பு டிஜிபி போட்டுள்ளனர். அதனால் யாருமே எப்ஐஆர் பதிவு செய்ய தயாராக இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை தெரிவிக்கையில், எஸ்ஐஆரை பொறுத்தவரை வாக்காளர் பட்டியலில் 80 லட்சம் பேரை நீக்க வேண்டும் என்று சொல்லி இருந்தோம். இன்று தேர்தல் கமிஷன் கொடுத்த ஆவணத்தின் படி 77 லட்சம் பேரை நீக்கி உள்ளனர் என்று கூறியுள்ளார். அத்துடன், வரைவு பட்டியலுக்கு முன்பாக தினமும் கொடுக்கும் செய்தி அறிக்கை அடிப்படையில் இதை தேர்தல் கமிஷன் கொடுத்துள்ளதாகவும், கடந்த 2024 லோக்சபா தேர்தலில் இந்த பட்டியலை கொண்டு தான் வாக்காளர்களை நாம் சந்தித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நீதிபதி சுவாமிநாதன் விவகாரம் குறித்து அண்ணாமலை குறிப்பிடுகையில், நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்க கோரி 120 எம்பிக்கள் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளனர். இந்திய அரசியல் சரித்திரத்தில் முதல் முதலாக ஒரு நீதிபதி தீர்ப்பு கொடுத்ததற்காக பதவி நீக்க நோட்டீஸ் கொண்டு வந்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த நோட்டீசில் திமுகவினர் பல அவதூறுகளை பரப்பி உள்ளனர் என்றும், இவ்வளவு பொய்களை பேசியதை பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சுட்டிக்காட்டியுள்ளார் என்று அண்ணாமலை பேசியுள்ளார்.
அத்துடன், கடந்த 08 ஆண்டுகளில் சுவாமிநாதன், பெரிய வழக்குகள் 75000 வழக்குகளை தீர்த்து வைத்துள்ளார். அப்படியிருந்தும், திமுகவினர் நமது நீதித்துறையின் நடவடிக்கையை கேலிக்கூத்தாக்கி இருக்கின்றனர் என்றும் அறிவித்துள்ளார்.
நீதியரசர்கள் இன்றைக்கு இங்கே நேர்மையான முறையில் பணியாற்றுவதற்கு இடம் இல்லை என்றும், திமுக ஆட்சியாளர்கள் எல்லாவிதமான பிரச்சினைகளை உருவாக்குகின்றனர். என்று நிருபர்களிடம் அண்ணாமலை போட்டியளித்துள்ளார்.

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அண்ணாமலை கூறியதாவது: தமிழக அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் இணைய வேண்டும் என்பதை முடிவு செய்ய தலைவர்கள் உள்ளனர். தமிழகத்தில் என்டிஏ கூட்டணி தலைவராக இபிஎஸ் இருக்கிறார். தமிழக பாஜ தலைவராக நயினார் நாகேந்திரன் உள்ளார். எனவே சரியான நேரத்தில் இவர்கள் சொல்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கூ.ட்டணிக்குள் யார் வரவேண்டும், வரவேண்டாம் என்று இவர்கள் பேசுவார்கள் என்றும், எல்லோருக்கும் தேவை ஒரு வலிமையான தேசிய ஜனநாயக கூட்டணி. அது எப்படி இருக்க வேண்டும் என்று தலைவர்கள் சொல்வார்கள் என்று பதிலளித்துள்ளார்.
மேலும், அமைச்சர் கே.என். நேருவுக்கு 03 கேள்விகள், அமலாக்கத்துறை கேட்டதை நான் கேட்கிறேன். அடிப்படை எப்ஐஆர் கூட போடவில்லை. எல்லாவற்றிலும் வெளிப்படையான ஊழல். 2026-இல் மக்களின் மனநிலை மாறும்.திமுக ஆட்சி போய்விடும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Nehru has committed Rs 1905 crore corruption alleges Annamalai