'மகளிர் உரிமைத் தொகையும், மகளிர் உரிமையும் உயரும்'; முதல்வர் ஸ்டாலின் உறுதி..!
Chief Minister Stalin assures that Womens rights amounts will increase
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 02-ஆம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்து உரையாற்றினார்.
அப்போது, வரலாற்றை திருத்தி எழுதும் வகையில் அமைந்த திட்டம் தான் மகளிர் உரிமை திட்டம் என்று கூறியதோடு, இது உதவித்தொகை இல்லை. உரிமைத்தொகை என திட்டம் தொடங்கும் போது அறிவித்தோம் என்று சுட்டிக்காட்டியதோடு, ஒரு திட்டத்தின் வெற்றி என்பது அதை வெற்றிகரமாக செயல்படுத்துவது மட்டும் அல்ல. அதனை பொது மக்கள் எவ்வளவு சிறப்பாக பயன்பெற்று, வாழ்க்கையை மேம்படுத்துவதில் உள்ளது. அதில் உரிமைத்தொகை பெரும் வெற்றி பெற்றுள்ளது என்று பேசினார்.
அத்துடன், பெண்களுக்கு, விடியல் பயணத்தில் ஆயிரம் ரூபாயும், புதுமைப்பெண் திட்டத்தால் ஆயிரம் ரூபாய் மிச்சமாகிறது என்று கூறினார். மேலும், அரசின் திட்டங்கள் மூலம் பணப்புழக்கமும், சேமிப்பு அதிகரித்துள்ளதாகவும், அரசின் திட்டங்களினால் முதலீடாக மாற்றி பொருளாதார வலிமையை பெண்கள் உயர்த்தி உள்ளனர். இதுதான் இந்த திட்டத்தின் வெற்றி என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், பெண்களின் கைகளில் பணம் உள்ளதால், அவர்களின் மதிப்பு அதிகரிக்கிறது என்றும், வாழ்க்கை தரம் உயரவும் உதவுவதக்கவும்,அண்டை மாநிலங்கள் கூட இந்த திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளமை, மகளிர் உரிமைத்திட்டத்தின் வெற்றியாகும் என்று குறிப்பிட்டார்.
அத்துடன், மக்கள் நலதிட்டங்களை இலவசங்கள் என கொச்சைப்படுத்துபவர்கள் கூட, இந்த திட்டத்தை அவர்கள் மாநிலங்களில் செயல்படுத்துகின்றனர் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதாவது, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, மஹாராஷ்டிரா, புதுச்சேரி, மேற்கு வங்கம், கர்நாடகா, ஹிமாச்சல பிரதேசம், சிக்கிம் என 10 மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறதாகவும், மகளிர் உரிமைத்தொகை மகளிர் மறுமலர்ச்சிக்கான திட்டமாக உயர்ந்து நிற்கிறது என்று பெருமிதமாக பேசினார்.
மேலும், குறிப்பிடுகையில், இன்று 16.96 லட்சம் பேரின் கணக்குகளில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1.39 கோடி பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்றும், தலைநிமிர்ந்த தமிழகத்தில் பெண்கள் உயர்ந்து நடைபோட மகளிர் உரிமைத்தொகை உயரும். பெண்களின் உரிமையும் உயரும் என்று அறிவித்தார்.
அத்துடன், கல்வி தான் சிறந்த முதலீடு. யாராலும் அளிக்க முடியாத சொத்து. தலைமுறை செழிக்க பெண்கள் முன்னேற்றம், பெண் கல்வி அவசியம்.என்றும் இந்த நிகழ்ச்சியில்முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
English Summary
Chief Minister Stalin assures that Womens rights amounts will increase