மலையாள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: 06 குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை..!
6 accused in Malayalam actress sexual assault case sentenced to 20 years in prison each
கேரளாவில் பிரபல நடிகை ஒருவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதேசெய்யப்பட்ட 06 குற்றவாளிகளுக்கும் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையை எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் விதித்துள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி அன்று பிரபல மலையாள நடிகை ஒருவர், காரில் சென்று கொண்டிந்த போது அவரை ஒரு கும்பல் கடத்தியது. பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை செல்போனில் படம் பிடித்தது. இந்த சம்பவம் கேரளா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குறித்தவழக்கில், கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் திலீப்பை (வழக்கில் 08-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்) நிரபராதி என்று எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்ததோடு, அவருடன் குற்றம் சாட்டப்பட்ட 03 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த 08 ஆண்டுகாலம் நடந்த இந்த வழக்கில் முதல் 06 பேர் குற்றவாளிகளான, சுனில் (எ) பல்சர் சுனி, மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜேஷ், சலீம், பிரதீப் ஆகியோருக்கு இன்று (டிசம்பர் 12)தண்டனை விவரங்கள் வெளியிடப்படும் என்று நீதிமன்றம் தீர்ப்பில் கூறப்பட்டது.
அதன்படி, இன்று குறித்த குற்றவாளிகள் 06 பேருக்கும் கூட்டு பாலியல் வன்கொடுமை, குற்றவியல் சதி ஆகிய குற்றங்களில் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்கு 00 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 50000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையை செலுத்தாவிட்டால், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், பாலியல் வன்கொடுமை காட்சிகள் அடங்கிய பென்டிரைவ்வை விசாரணை அதிகாரியின் பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தமது தீர்ப்பில்கூறியுள்ளது.
English Summary
6 accused in Malayalam actress sexual assault case sentenced to 20 years in prison each