ஐரோப்பாவை ஓரங்கட்டி, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 05 நாடுகளுடன் இணைந்து புது அமைப்பு; அமெரிக்க அதிபர் ஆலேசனை..?
US President suggests starting a new organization with 5 countries including India and Russia
அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து 'சி5' என்ற அமைப்பை புதிதாக தொடங்குவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஊடகங்கள், இது குறித்து செய்திகளை வெளியிட்டுள்ளது. அதில், ஐரோப்பாவை ஓரங்கட்டிவிட்டு, ஜி7 அமைப்புக்கு மாற்றாக 'Core -5(C5)' என்ற புதிய அமைப்பை கொண்டு வரவும் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த 'சி5' அமைப்பு தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியதாக வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
' சி5 அல்லது சி7 என எதுவும் விவாதிக்கப்படவில்லை என்றும், இன்றைய சூழ்நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் அல்லது ஜி5 உள்ளிட்ட அமைப்புகள் பொருத்தமானதாக இல்லை என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக எனக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி,'புதிதாக மாற்று அமைப்பு எதையும் தொடங்கும் ஆலோசனை நடத்தவில்லை எனக்கூறி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற திட்டம் இல்லை என அதிகாரிகள் மறுத்து வருகின்ற போதிலும், டொனால்ட் டிரம்ப் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளை பார்க்கும் போது, இந்த திட்டம் சாத்தியம் இல்லை எனக்கூற முடியாது என சில அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் அதிபராக பதவியேற்றதும் இந்தியா, சீனா, ரஷ்யா நாடுகள் உடன் மோதல் போக்கை கடைபிடித்தார். இதனால் நாடுகளின் நட்புறவை விரிசல் ஏற்பட்டது. அத்துடன், இந்தியா, சீனா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்ததோடு, ரஷ்யா மீது பொருளாதார தடைகளையும் அதிகரித்தார்.

அதே நேரத்தில், சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி , ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷி-ஜின்பிங் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றினர். இதனை பார்த்த டிரம்ப், இந்தியா மற்றும் ரஷ்யாவை சீனாவிடம் இழந்துவிட்டோம் என புலம்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர், சிப் விற்பனை தொடர்பாக சீனாவுடன் மென்மையான போக்கை கடைபிடித்த ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புடினுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தனது சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரேட் குஷ்னரை ரஷ்யாவுக்கு டிரம்ப் அனுப்பியும் வைத்தார். இந்நிலையில், நேற்றையதினம் டிரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடினார். அப்போது, இருநாட்டு வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்பட்டது.
English Summary
US President suggests starting a new organization with 5 countries including India and Russia