“என்.டி.ஏ கூட்டணியில் தவெக இணையாததற்கு ஆதவ் அர்ஜுனாதான் காரணம்” – ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் சூழல் தேர்தலை முன்னிட்டு பரபரப்பாக மாறி வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) குறித்து புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. என்.டி.ஏ கூட்டணியில் தவெக இணையாததற்கு கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாதான் காரணம் என லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில் தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சி (லஜக) தற்போது புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்து 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அவர் கூறியதாவது:“தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணைவதை ஆதவ் அர்ஜுனாதான் தடுத்தார். தவெகவுக்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட பிரச்சினையும் இல்லை. எனக்கும் என் தந்தைக்கும் இடையே பிளவை ஏற்படுத்தியது கூட ஆதவ் அர்ஜுனாதான். அவர் தான் மட்டுமே அறிவாளி என்ற மனப்பான்மையுடன் செயல்படுகிறார்.”

இதற்கு முன்பு கொளத்தூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, தவெக எந்த கூட்டணியிலும் இணையாது எனத் தெளிவாக தெரிவித்திருந்தார்.

அப்போது அவர் கூறியதாவது:“தவெக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. பல தரப்பிலிருந்து கூட்டணி ஆஃபர்கள் வந்தன. 90 தொகுதிகள் தருவதாகவும், இரண்டரை ஆண்டுகள் வீதம் முதல்வர் பதவி பகிர்ந்து கொள்ளலாம் என்றும் பேரம் பேசப்பட்டது. ஆனால் பதவிக்காக டெல்லிக்கு அடிபணிய மாட்டோம் என்று விஜய் தெளிவாக கூறிவிட்டார்.”

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியிலும் பேசும்போது, தவெக தலைவர் விஜய்,“இந்த கூட்டணி, அந்த கூட்டணி என எதிலும் நாம் செல்லவில்லை. தவெக தனித்தே தேர்தலை சந்திக்கும்,”என்று உறுதியாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் தவெக இடம்பெறாததற்கு ஆதவ் அர்ஜுனாதான் காரணம் என ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Adhav Arjuna is the reason why Thaweka did not join the NDA alliance Jose Charles Martin alleges


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->