மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027; ரூ.11,718 கோடி ஒதுக்கீடு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
Union Cabinet approves allocation of Rs 11718 crore for population census
தலைநகர் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு பின்னர் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களை சந்தித்து கூறியதாவது: எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்று அறிவித்துள்ளார்.
குறித்த மக்கள்தொகை கணக்கெடுப்பானது, முதல் முறையாக டிஜிட்டல் முறையில் நடக்கவுள்ளதாகவும், தரவுகளை பாதுகாப்பாக வைக்கும் வகையில் டிஜிட்டல் முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு, முதல் கட்டமாக வரும் 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலும், இரண்டாம் கட்டமாக 2027 பிப்ரவரியிலும் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Union Cabinet approves allocation of Rs 11718 crore for population census