ஹார்முஸ் பதற்றம்… ரஷியாவுக்கு புதிய வாய்ப்பு...! - கச்சா எண்ணெய் விற்பனையில் ரூ.64 ஆயிரம் கோடி வருமானம் - Seithipunal
Seithipunal


உக்ரைன் மீது போர் தொடங்கியதையடுத்து ரஷியாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையான தடைகள் விதித்தன. இதனால் உலக சந்தையில் அந்த நாட்டின் எண்ணெய் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த சூழலில், தள்ளுபடி விலையில் கிடைத்த ரஷிய கச்சா எண்ணெயை இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் இறக்குமதி செய்து வந்தன. ஆனால் அதற்கும் அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து பல கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்நிலையில் ஈரான் தொடர்பான போர்சூழல் ரஷியாவுக்கு புதிய வாய்ப்பாக மாறியுள்ளது. பாரசீக வளைகுடாவில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் உலகளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மாற்று ஆதாரங்களை தேட வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ரஷியா மீண்டும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அதிகரித்து வருகிறது.

பல நாடுகள் அந்த நாட்டிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவதால் ரஷியாவுக்கு பெரிய வருமானம் கிடைத்து வருகிறது.

ஜெர்மனியை சேர்ந்த அர்ஜ்வால்டு அமைப்பின் தகவலின்படி, போர் தொடங்கியதிலிருந்து இதுவரை ரஷியா சுமார் 7 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.64 ஆயிரம் கோடி) மதிப்பிலான கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த மாதத்தை ஒப்பிடும்போது 14 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hormuz Tensions New Opportunity Russia Revenue 64000 Crores from Crude Oil Sales


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->