சொல்பேச்சு கேட்காத ரஷ்யா மற்றும் உக்ரைன்; 'மோதல் தொடர்ந்து நடந்தால், மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும்; ட்ரம்ப் எச்சரிக்கை..!
Trump warns that if the conflict between Russia and Ukraine continues it could lead to World War III
ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வரும் போரை, நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த அனைத்தும் முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. இருந்தாலும் அயராது அடுத்த கட்ட முயற்சியாக, போரை நிறுத்துவதற்கு இரு நாடுகளுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை ட்ரம்ப் விரைவுபடுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதலில் உயிரிழப்புகளை தடுக்க விரும்புவதாகவும், கடந்த மாதம் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆகையால், இதனை உடனடியாக நிறுத்துவதற்காக கடுமையாக உழைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு போர் தொடர்ந்து நடந்தால், அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்றும்ந எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து இதுபோன்று நடந்தால் மூன்றாம் உலகப்போரைத் தவிர வேறு வழியில்லை என்றும், அதனை பார்க்க யாரும் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையில், போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் டொனால்ட் டிரம்ப் விரக்தியடைந்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கரோலின் லெவிட் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; ரஷ்யாவும், உக்ரைனும் அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மெதுவாக செயல்படுவதால் டிரம்ப் விரக்தியடைந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், வெறும் சந்திப்புக்காக மட்டும் கூட்டம் நடப்பதை ட்ரம்ப் விரும்பவில்லை என்றும், ஒரு முடிவும் எடுக்க முடியாத சந்திப்புகளால் டிரம்ப் சோர்வடைந்துவிட்டதால், அவர் முடிவைத்தான் எதிர்பார்க்கிறார். வெற்று வார்த்தைகளை அல்ல என்றும் கூறியுள்ளார். மேலும், இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகவும் விருப்புவதாக கரோலின் லெவிட் மேலும் தெரிவித்துள்ளார்.
English Summary
Trump warns that if the conflict between Russia and Ukraine continues it could lead to World War III