5 மாநில தேர்தல் களம்: தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்...! - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு...! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான விரிவான ஏற்பாடுகளைத் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக மேற்கு வங்காளத்தில் அதிகபட்சமாக 6.4 கோடி வாக்காளர்களும், தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்களும் பங்கேற்க உள்ளனர். மேலும், கேரளாவில் 2.7 கோடி, அசாமில் 2.5 கோடி மற்றும் புதுச்சேரியில் 9.44 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் 5 மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 2,18,807 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன; இதில் தமிழ்நாட்டில் மட்டும் 75,032 வாக்குச்சாவடிகள் செயல்படவுள்ளன.

இந்த ஜனநாயகத் திருவிழாவை அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்தி முடிக்க சுமார் 25 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் 15 லட்சம் தேர்தல் அதிகாரிகள் மற்றும் 8.5 லட்சம் பாதுகாப்புப் படையினர் அடங்குவர்.

இதுதவிர, நுண் பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை அதிகாரிகள் எனப் பலதரப்பட்ட குழுவினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர்தல் முற்றிலும் சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தலைமை தேர்தல் ஆணையர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 State Election 5point67 Crore Voters Tamil Nadu Election Commission Issues Major Announcement


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->