#ஆந்திரா : சென்னையில் இருந்து கடத்திய 5 கிலோ தங்கம் பறிமுதல்..! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு காரில் கடத்தி வரப்பட்ட ஐந்து கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்திலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு ஆந்திர, தள்ளம்பள்ளி பகுதியில் உள்ள சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது சென்னையில் இருந்து வந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் காரில் 5 கிலோ எடை கொண்ட தங்க பிஸ்கட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து காரில் இருந்த 4 பேரிடம் விசாரணை செய்ததில் அவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், சென்னையில் இருந்து தங்கம் கடத்தி வரப்பட்டதும் தெரியவந்தது.

இந்நிலையில் கார் மற்றும் தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார், தங்கத்தை கடத்தி வந்த நான்கு பேரிடமும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 kg gold seized smuggled gold in andhra


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->