மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் ரூ.34.13 கோடி வருவாய் - மத்திய அமைச்சர் தகவல்.!!
34 crores income from mann ki baath programme
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமையன்று வானொலியில் மக்களிடம் உரையாடி வருகிறார். இந்த நிகழ்ச்சி தான் மனதின் குரல் எனப்படும் மன் கீ பாத் ஆகும். இந்த நிகழ்ச்சி மூலம் பேசும் பிரதமர் மோடியின் பேச்சு நாடு முழுவதும் உள்ள மக்களிடம் உத்வேகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் மத்திய அரசுக்கு ரூ.34.13 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில் அளித்துள்ளார்.

அதாவது, மன் கீ பாத் நிகழ்ச்சி கூடுதல் செலவுகள் இல்லாமல், தற்போதுள்ள வசதிகளைப் பயன்படுத்தி ஆகாஷ்வாணியால் தயாரிக்கப்படுகிறது என்று சாமத்திய அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மன் கீ பாத் நிகழ்ச்சி கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
34 crores income from mann ki baath programme