கடன் தருவதாக கூறி பெண்மணியை ஐவர் சேர்ந்து சீரழித்த கொடூரம்.. விடுதிக்குள் அரங்கேறிய பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


டெல்லியை சார்ந்த 27 வயது பெண்மணி சுற்றுலா வழிகாட்டியாகவும், பயணசீட்டு முன்பதிவு செய்து வழங்கும் நபராகவும் இருந்து வந்துள்ளார். இந்த பெண்மணிக்கு மனோஜ் சர்மா என்பவரின் அறிமுகம் கிடைக்கவே, இவரிடம் இருந்து ரூ.18 இலட்சம் கடன் வாங்க அணுகியுள்ளார்.

முதல் தவணையாக ரூ.7 இலட்சம் வாங்கிய நிலையில், கடனின் இரண்டாவது தவணையை வசூல் செய்ய மனோஜ் சர்மாவை அணுகியுள்ளார். இதற்கு பதிலளித்த மனோஜ், அங்குள்ள நட்சத்திர விடுதிக்கு வந்து பணத்தை வாங்கி செல்ல கூறியுள்ளார். 

விடுதிக்கு சென்று வெளியே இருந்து மீண்டும் அலைபேசியில் தொடர்பு கொண்ட நிலையில், அறைக்கு வந்து பணம் வாங்கி செல்ல கூறியுள்ளார். பணத்தேவை காரணமாக தயங்கி அறைக்கு சென்ற நிலையில், அங்கு மனோஜ் சர்மா உட்பட 5 பேர் இருந்துள்ளனர். 

இவர்கள் ஐந்து பேரும் சேர்ந்து பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர். பின்னர் பெண்மணி தனக்கு நடந்த கொடூரம் குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் மனோஜ் சர்மாவை கைது செய்துள்ளனர். மேலும், அவனது நண்பர்கள் 4 பேரை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

25 year old girl sexual abuse by gang in Delhi 5 Star Hotel


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal