போதைப்பொருள் வழக்கில் பிக் பாஸ் போட்டியாளர் அதிரடி கைது.. இல்லத்திற்கே சென்று தூக்கிய காவல்துறை.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் கல்யாண் நகர் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், தடை செய்யப்பட்டுள்ள போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இந்த தகவலை அறிந்த காவல் துறையினர், போதைப்பொருள் சிறப்பு தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கும் தகவலை தெரியப்படுத்தி, அனைவரும் அதிரடியாக அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று சோதனை செய்தனர். 

இந்த சோதனையில், தடை செய்யப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் சிக்கியது. இந்த விஷயம் தொடர்பாக கன்னட சின்னத்திரை நடிகை அனிகா, அவரது கூட்டாளி அனூப், ரவீந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்களிடம் மேற்கொணட விசாரணையில், கன்னட திரையுலகினரும் போதைப்பொருள் விற்பனை செய்வது அம்பலமானது. 

இதனையடுத்து இவ்வழக்கு தொடர்பான விசாரணை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு மற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சின்னத்திரை நடிகையான அனிகாவிடம் மேற்கொண்ட விசாரணையில் பெங்களூரை சார்ந்த நடன கலைஞர் மற்றும் திருநங்கை ஆடம் பாஷாவும் போதைப்பொருள் விற்பனையில் இருந்தது அம்பலமானது. இதனைப்போன்று அவர் போதைப்பொருளை உபயோகம் செய்தும் வந்துள்ளார். ஆடம் பாஷாவை நேற்று காவல் துறையினர் அவரது வீட்டில் வைத்து கைது செய்த நிலையில், கடந்த வருடம் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2019 Biggboss Kannada Contestant Adam Basha arrest by police drug using and sales


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
Seithipunal