கேரளா || படகில் கடத்தி வந்த 200 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்.! ஈரான் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 6 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் படகில் கடத்தி வந்த 200 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்த அதிகாரிகள் ஈரான் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.

கேரளா கொச்சி துறைமுகத்தில் கடற்படை அதிகாரிகள் ரோந்து கப்பலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொச்சியில் இருந்து சுமார் 1200 மைல் தொலைவில் ஒரு படகு சந்தேகத்திற்கிடமாக சென்று கொண்டிருந்தது.

இதைப்பார்த்த கடற்படை அதிகாரிகள் அந்த படகை சுற்றி வளைத்து அந்த படகின் ஆவணங்களை பரிசோதனை செய்தனர். இதில் அந்த படகு ஈரான் நாட்டில் பதிவு செய்யப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்த படகில் சோதனை மேற்கொண்டதில் 200 கிலோ போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் இந்த போதை பொருளின் மதிப்பு ஒரு கிலோ ரூ.2 கோடி என படகில் இருந்த மொத்த போதை பொருளின் மதிப்பும் ரூ.400 கோடி ஆகும்.

இதையடுத்து அந்த படகையும், படகில் இருந்த போதைப் பொருட்களையும் கடற் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் படகில் போதைப் பொருட்கள் கடத்தி வந்த ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 6 பேரையும் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

200 kg of drugs smuggled in the boat seized in kerala


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->