அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 18 பேர் பலி.!! அதிரும் மகாராஷ்டிரா.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 18 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தானே மாவட்டம் தல்வா பகுதியில் உள்ள சத்திரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 பெண்கள், 8 ஆண்கள் என கடந்த 24 மணி நேரத்தில் ஒவ்வொருவராகஉயிரிழந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு அமைத்துள்ள முதலமைச்சர்  ஏக்நாத் ஷிண்டே முழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இவர்களுக்கு நிமோனியா, பக்கவாதம், சிறுநீரக பிரச்சனை இருந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் அம்மாநில அரசியலில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இந்த உயிரிழப்பு மனவேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

18 people died in single day in the maharashtra govt hospital


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->