அசாம் : ரூ.18 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - மணிப்பூரை சேர்ந்த 2 பேர் கைது - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலம் கம்ரூப் மாவட்டத்தில் போலீசார் சுமார் ரூ.18 கோடி மதிப்புள்ள ஹெராயினை பறிமுதல் செய்தனர்.

அசாம் கம்ரூப் மாவட்டத்தின் வழியாக மணிப்பூரை சேர்ந்தவர்கள் போதை பொருள் கடத்தி வருவதாக அசாம் சிறப்பு அதிரடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையினர் கம்ரூப் காவல்துறையினருடன் இணைந்து கம்ரூப் மாவட்டத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்பொழுது சொகுசு காரில் போதை பொருள்கள் கடத்தி செல்வதாக கிடைத்த குறிப்பிட்ட தகவலையடுத்து, அவ்வழியாக வந்த போலீசார் சொகுசு காரை விரட்டிச் சென்றனர். அப்பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி ஹஜோவில் உள்ள போவா மக்காவின் மலைப்பகுதியில் பள்ளத்தில் விழுந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் காரின் சோதனை நடத்தியதில் 100 சோப்பு பெட்டிகளில் 1.3 கிலோ ஹெராயின் போதை பொருட்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காரில் வந்த இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்டவர்கள் மணிப்பூரைச் சேர்ந்த அப்துல் ஹசன் மற்றும் முஸ்தக் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் விசாரணை நடத்தியதில், கவுகாத்தி பகுதியில் 900 கிராம் எடையுள்ள ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் இரண்டு இடங்களில் சிக்கிய ரூ.18 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

18 crore worth drugs seized in Assam


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?




Seithipunal
-->