சென்னையில் 16 விமான சேவைகள் பாதிப்பு - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


சென்னையில் 16 விமான சேவைகள் பாதிப்பு - நடந்தது என்ன?

சென்னை மற்றும் அதன் றநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

அதாவது, ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் இருந்து 64 பயணிகளுடன் சென்னை வந்த விமானம் மோசமான வானிலையினால், சென்னையில் தரையிறங்க முடியாமல் திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, கண்ணூரில் இருந்து சென்னை வந்த விமானம், மும்பையில் இருந்து வந்த விமானம், டெல்லியில் இருந்து வந்த விமானம் ஆகிய 4 உள்நாட்டு விமானங்களும் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி இருந்தன. 

மேலும், வெளிநாட்டு விமானமான சிங்கப்பூரில் இருந்து வந்த விமானமம் மோசமான வானிலையால் தரையிறங்கமுடியாமல் வானத்திலே சுற்றித் திரிந்தது. பின்னர் வானிலை சீரடைந்ததும் தாமதமாக தரை இறங்கின. 

இதேபோல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய இரண்டு கோலாலம்பூர் விமானங்கள், துபாய், குவைத், சிங்கப்பூர் உள்ளிட்ட ஐந்து பன்னாட்டு விமானங்கள், மும்பை, ஐதராபாத், ஜெய்ப்பூர், பெங்களூருக்குச் செல்ல கூடிய ஆறு உள்நாட்டு விமானங்கள் என்று மொத்தம் 11 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு் சென்றன. 

காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் வருகை மற்றும் புறப்பாடு என்று மொத்தம் 16 விமான சேவைகளின் பாதிப்பினால், பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

16 flight service affected in chennai airport for heavy rain


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->