இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு.. வெளியான அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அதிவேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அமலில் உள்ளது. 

அம்மாநிலத்தில் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக அண்மையில் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கானது வரும் 19ம் தேதி வரை அமுலில் இருக்கும். கடும் கட்டுப்பாடுகளுடன் வார நாட்களில் போக்குவரத்து சிலவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மளிகை கடைகள், இறைச்சி கடைகள் மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

14 days lockdown in odisha


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal