போதை விருந்தில் மயங்கிய 115 பேர்...! – காவலர்களின் மிட்நைட் அதிரடி சோதனை! நடந்தது என்ன...?
115 people fainted at drug party Midnight raid by police What happened
பெங்களூரு தெற்கு மாவட்டத்தின் கக்கலிபுரா போலீஸ் வரம்புக்குள் அமைந்துள்ள சுகாஷ் கவுடா எனும் தொழிலதிபருக்கு சொந்தமான ஒரு பிரமாண்ட ரிசார்ட்டில் இரவு நேரத்தில் நடைபெற்ற ரகசிய போதை விருந்தை போலீசார் முறியடித்துள்ளனர்.இரவு முழுவதும் சத்தம், ஒளி, இசை என நடந்த விருந்தில் போதைப்பொருட்கள் மற்றும் மது விருந்து நடந்ததாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை போலீசார் ரிசார்ட்டை முற்றுகையிட்டு அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது, ரிசார்ட்டின் உள் பகுதியில் இளம்பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் போதை விருந்தில் மயங்கிக் கிடந்தது போலீசாருக்கு தெரியவந்தது. பலர் மது அருந்தியிருந்ததுடன், சிலர் கஞ்சா மற்றும் மற்ற போதைப்பொருட்களையும் பயன்படுத்தியிருந்தனர் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, 115 பேரை போலீசார் கைது செய்தனர்.இதில் கைதானவர்களில் 35 இளம்பெண்கள் மற்றும் 3 சிறுமிகள் இருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. அனைவரும் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் ரிசார்ட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வந்திருந்ததும் தெரியவந்துள்ளது.
அவர்கள்மீது ராமநகர் அரசு மருத்துவமனையில் போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாஸ் கவுடா தெரிவிக்கையில்,"சோதனையில் ரிசார்ட்டிலிருந்து மது, கஞ்சா, சில ஊசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. விருந்தில் பங்கேற்றவர்கள் உண்மையில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியார்களா என்பது மருத்துவ முடிவில் தெரியும். இதனைச் சுற்றி விரிவான விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.
English Summary
115 people fainted at drug party Midnight raid by police What happened