இந்தியாவில் 10 கோடி பேருக்கு சர்க்கரை வியாதி, தமிழகத்தில் 1 கோடி பேருக்கு.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பத்து கோடி பேருக்கும், தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கும் சர்க்கரை வியாதி இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய தேசிய அளவிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மக்கள் தொகை அடிப்படையில் விரிவாக நடத்தப்படும் முதல் ஆய்வு இது தான். 

இந்த ஆய்வில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, உடல் பருமன் உள்ளிட்ட தொற்றாத நோய்களும் அவற்றுக்கான முக்கிய காரணிகள் என்னென்ன மற்றும் மக்களிடம் இந்த நோய்கள் எவ்வளவு பரவி உள்ளது என்பதை கூறுகிறது. இந்தியாவில் 11.4% பேருக்கு நீரிழிவு நோய் உள்ளதாகவும், நகர்ப்புறங்களில் 16.4% பேருக்கும், கிராமப்புறங்களில் 8.9% பேருக்கும் உள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 

தமிழ்நாட்டில் 14.4% பேருக்கு, சுமார் ஒரு கோடி பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் நீரிழிவு நோய் அதிகமாக இருக்கும் ஐந்தாவது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக கோவாவில் 26.4% பேருக்கும், அடுத்தப்படியாக புதுச்சேரியில் 26.3 சதவீதம் பேருக்கும், குறைந்த பட்சமாக உத்தப்பிரதேசத்தில் 4.8% பேருக்கும் நீரிழிவு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2019ம் ஆண்டில் நாடு முழுவதும் 7 கோடி பேருக்கு நீரிழிவு இருந்தநிலையில், 4 ஆண்டுகளில் 44 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில், அதாவது எதிர்காலத்தில் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயத்தில் (pre diabetic ) இருப்பவர்கள் 15.3% ஆகும். இந்த ஆய்வின் முடிவுகள் மருத்துவர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10 crores Indians affected diabetes


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->