அலர்ஜி வர காரணம் தெரிந்தால் அதிர்ந்து போவீங்க...!
Youll shocked to know cause allergies
அலர்ஜி ஏற்படக் காரணங்கள்:
அலர்ஜி என்றால் என்ன?
வெளியில் இருந்து உடலுக்கு ஒவ்வாத பொருட்கள் நுழையும் போது, உடல் காட்டும் நோய் எதிர்ப்பு தன்மையின் காரணமாக உருவாவதுதான் அலர்ஜி.
காரணங்கள் :
தட்பவெப்பம், உணவு, சுற்றுச்சூழல் மாசு உள்பட பல காரணங்களால் அலர்ஜி உண்டாகும்.
மலரின் மகரந்தம், செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய், பூனை ஆகியவற்றின் தோலில் உள்ள ஒரு பொருள், முடி ஆகியவற்றில் இருந்தும் அலர்ஜி ஏற்படும்.

வேதிப்பொருட்கள் உடலில் உற்பத்தியாவதால் கண்ணில் நமைச்சல், கண்கள் வீங்கி சிவத்தல், மூக்கடைப்பு, மூக்கில் வடிதல், தொடர் தும்மல், இருமல், தோலில் சிவந்த தடிப்பு போன்ற அலர்ஜிக்கான அறிகுறிகள் இருப்பின்> மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்..அலர்ஜி வராமல் தடுப்பு முறைகள் :
அலர்ஜி உடையவர்களுக்காக தனியாகத் தயாரிக்கப்படும் அலர்ஜியற்ற உணவு, உணவுப் பொருட்களை உண்ணலாம்.
பாலிதீன் பேப்பர் மற்றும் பிராணிகளின் ரோமம், தோலால் செய்யப்பட்ட பைகளில் உணவை பொட்டலம் கட்டிப் பயன்படுத்தக்கூடாது. அது ரசாயன மாற்றம் அடைந்து அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
புதிய துணியாக இருந்தாலும் துவைத்த பின் பயன்படுத்தவும். உள்ளாடைகளை நீண்ட காலத்துக்கு பயன்படுத்துவதை தவிர்த்தல் வேண்டும்.
சுத்தமாக இருத்தல் மிகவும் அவசியம்.
English Summary
Youll shocked to know cause allergies