செம்பருத்தியுடன் ஆவாரம் பூ மற்றும் பாசிப்பருப்பு., கறிவேப்பிலையை சேர்த்து அரைத்து இப்படி செய்து வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?.!! - Seithipunal
Seithipunal


செம்பருத்தியின் மருத்துவ மகத்துவம் குறித்து அனைவரும் அறிவோம்., இதனை தமிழன் அறிந்ததால் தான் செம்பருத்தி... செம்பருத்தி பூவை போல பெண்ணொருத்தி என்று பூக்களுடன் ஒப்பிட்டு பாடலை எழுதியிருந்தான். செம்பருத்தி பூவிற்கு தாயகம் கிழக்கு ஆசியாவாகும். இந்த பூவானது மலேசிய நாட்டின் தேசிய மலராகவும்., சீன ரோஜா என்ற பெயரும் கொண்டுள்ளது. 

தமிழனின் முன்னோடியான தமிழ் சித்தர்கள் செம்பருத்தி பூவை தங்க புஸ்பம் என்று அழைப்பதும் அனைவரும் அறிவோம்., செம்பருத்தியில் இருக்கும் மருத்துவ குணத்தின் மூலமாக பல அளப்பரிய நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. தினமும் காலையில் எழுந்ததும் செம்பருத்தி பூவின் இதழ்களை சாப்பிட்டு வந்தால்., இதய நோயானது விரைவில் சரியாகும். 

இதுமட்டுமல்லாது இதய நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் படபடப்பு., இதய வலி., இரத்தக்குழாய் அடைப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளில் இருந்து இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்களை பாதுகாக்கிறது. இந்த பிரச்சனையை தவிர உடல் சூடு மற்றும் கோபத்தை கட்டுப்படுத்தி உடலுக்கு தேவையான குளிர்ச்சியையும்., மன அமைதியை வழங்குகிறது. 

பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் மாதவிடாய் பிரச்னையை சரி செய்வதற்கு செம்பருத்தி பூக்களை சாப்பிட்டு வரும் பட்சத்தில்., மாதவிடாய் கோளாறுகள் மற்றும் கர்ப்பப்பை குறைபாடுங்கள் சரி செய்யப்படும். பெண்கள் பருவமடையும் வயதிற்கு வந்தும் பருவமடையாமல் இருக்கும் பட்சத்தில்., செம்பருத்தி பூக்களை நெய்யில் வறுத்து சாப்பிட்டு வந்தால் பருவமடைதல் விரைவில் நிகழும். 

செம்பருத்தி பூக்களுடன் சீயக்காய் பொடியை சேர்த்து தேய்த்து குளித்து வந்தால் பொடுகு., முடி உதிரும் பிரச்சனை மற்றும் இளநரை பிரச்சனையில் இருந்து விலக நல்ல தீர்வு கிடைக்கும். காயவைத்த செமபருத்தியுடன் ஆவாரம் பூ., பாசிப்பருப்பு., கருவேப்பிலையை சேர்த்து அரைத்து தேய்த்து குளித்து வந்தால் நோய்களின் தாக்கத்தில் இருந்து நமது உடலை பாதுகாக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

will you eat semparuthi to gain more health in your body


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->