மீண்டும் மீண்டும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் எலான் மஸ்க்!
Elon Musk tops list richest people again and again
அமெரிக்க நாட்டின் பங்குச்சந்தை குறியீடுகளை புதிய உச்சங்களுக்கு மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் கொண்டு சென்றுள்ளன. இதன் காரணமாக கொண்டு பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று இதன் அடிப்படையில் உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில், எலான் மஸ்க் 401 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்களை வைத்து அதாவது இந்திய மதிப்பில் ரூ.34 லட்சம் கோடி வைத்துள்ள பணக்காரர்களில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
இதில் 2-வது இடத்தில் லாரி எலிசனும், 3-வது இடத்தில் மார்க் ஜுக்கர்பெர்க்கும் இடம்பிடித்துள்ளனர். இதையடுத்து ஜெப் பெசோஸ், லாரி பேஜ், ஜென்சன் ஹுவாங், செர்ஜி பிரின், ஸ்டீவ் பால்மர், வாரன் பபெட், பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் முறையே 4 முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.
இதில் நேற்றைய தேதி நிலவரப்படி வெளியிடப்பட்ட உலகின் முதல் 10 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 9 பேர் அமெரிக்கர்கள் ஆவர். பெர்னார்ட் அர்னால்ட் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
English Summary
Elon Musk tops list richest people again and again