கூகுள் மேப் பார்த்து ஓட்டி வரப்பட்ட கார் - அந்தரத்தில் தொங்கிய அவலம்.!!
car accident in kulithalai for watch google map
கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் அருகே தென்கரை வாய்க்கால் செல்கிறது. இதன் மேல் பக்கவாட்டு சுவர் இல்லாத சிறிய பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் வழியாக குளித்தலை நகரப்பகுதியில் இருந்து கரூர்-திருச்சி புறவழி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லமுடியும்.
இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த முகமது என்பவர் காரில் கோவை சென்றுவிட்டு மீண்டும் கும்பகோணத்துக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது குளித்தலை அருகே தொழுகை நடத்துவதற்காக கூகுள் மேப் மூலம் பள்ளிவாசலை தேடியுள்ளார்.
அதில், குறுக்கே உள்ள நடைபாலத்தை கடந்து செல்ல வேண்டும் என்று காட்டியுள்ளது. இதையடுத்து, முகமது குறுகிய பாலத்தின் வழியே காரை இயக்கினார். எதிர்பாராதவிதமாக காரின் முன்சக்கரம் பாலத்தின் விளிம்பில் கீழே இறங்கி, அந்தரத்தில் தொங்கியது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வாய்க்காலில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் முகமதுவை கீழே விழாதவாறு காரில் இருந்து பத்திரமாக மீட்டனர்.
இதையடுத்து முகமது கிரேன் மூலம் பாலத்தில் விபத்துக்குள்ளான தனது காரை பத்திரமாக மீட்டுள்ளார். கூகுள் மேப் பாத்து வண்டியை இயக்கிய போது பாலத்தில் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
car accident in kulithalai for watch google map