உடுமலை || வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை - 2 அதிகாரிகள் பணியிடைநீக்கம்.!
2 forest department officers suspend for investigation prisoner sucide case in udumalai
தமிழக-கேரள எல்லையில், சின்னார் சோதனைச்சாவடியில் கேரள கலால்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 30-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டபோது கேரள மாநில அரசு பேருந்து ஒன்று திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து மூணாறு நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் அதனை கலால்துறை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த பேருந்தில் உடுமலை பகுதியில் வசிக்கும் பழங்குடியினத்தை சேர்ந்த தொழிலாளி மாரிமுத்து என்பவரிடம் சிறுத்தை பல் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் மாரிமுத்துவை தமிழக வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து வனத்துறையினர் உடுமலை வனச் சரக அலுவலகத்துக்கு மாரிமுத்துவை அழைத்துச்சென்று அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் மாரிமுத்து நேற்று முன்தினம் வனத்துறை அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மாரிமுத்து தற்கொலை வழக்கில் வனத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்த வனவர் நிமல், வனக்காவலர் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
2 forest department officers suspend for investigation prisoner sucide case in udumalai