மாலை நேரத்தில் உளுந்து வடை சாப்பிடுவதன் பின்னணி இது தானா.?!  - Seithipunal
Seithipunal


நம்முடைய வீட்டில் விஷேச நாட்களில் பரிமாற்றப்படும் உணவுகளில் மிக மிக முக்கியமானது உளுந்த வடை. இது பலருக்கும் பிடித்த வடை வகை ஆகும். தரமான எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட உளுந்து வடையானது வயிற்றுப்புண், வாய்ப்புண், இடுப்புவலி, எலும்புத் தேய்மானம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.

உளுந்த வடையை மாலை வேளைகளில் சாப்பிடுவதற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய மருத்துவக் காரணம் இருக்கின்றது.

ஆயுர்வேதத்தின் கூற்றுப்படி மாலை வேளைகளில் உடலில் வாதமானது அதிகமாக இருக்கும். இதன் காரணமாக தான் அந்த மாலை நேரத்தை `வாதகாலம்' என முன்னோர்கள் குடிப்பிடுவது வழக்கம்.
 
நாம் அன்றாடம் காலையிலிருந்து மாலை வரை பணியாற்றுகின்றோம் இதன் காரணமாக நமக்கு அசதி ஏற்படுகின்றது. இந்த மாலை வேளையில் உடலுக்கு ஊட்டத்தையும் ஆற்றலையும் தருகின்ற சிற்றுண்டியை நாம் உட்கொள்வது அவசியம்.

அதற்கு மிகச்சிறந்த உணவு உளுந்த வடை தான். உடலுழைப்பில் அதிகமாக ஈடுபடுபவர்களும் சரி, அதிக அலைச்சல் இருக்கும் பணிசெய்பவர்களாக இருந்தாலும் சரி உளுந்து வடை சாப்பிடும் பொழுது நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

why dhal vada become evening snakes


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->