வால்நட் பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள்!
walnuts benefits in tamil
* வெறும் வயிற்றில் நாம் ஊற வைத்த வால்நட் பருப்பை சாப்பிடும்பொழுது உடலுக்கு இரண்டு மடங்கு நன்மை கிடைக்கிறது.
* இதனை சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும். ஊறவைத்த வால்நட் பருப்பில் ஒமேகா 3, பேட்டிஆசிட், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் போன்றவை அதிகமாக இருக்கும்.

* பொதுவாக வால்நட் மற்ற பருப்புகளை காட்டிலும் கசப்பாக இருக்கும். இதனை தேனில் கலந்து உண்ணலாம். இதில் கொழுப்பு இல்லை. புரதம், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் கே, வைட்டமின் டி, வைட்டமின் பி12, கால்சியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
* வால்நட் சாப்பிடுவதால் மூளை செயல்பாடு மேம்படும். குழந்தைகளுக்கு இதனை கொடுப்பதால் சிந்தனை திறன் அதிகரிக்கும்.
* மேலும் நினைவாற்றல் மேம்படுத்தும். வால்நட் பருப்புகளை பெண்கள் சாப்பிடுவதால் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். கணைய புற்றுநோய் அபாயத்தை குறைக்கவும் இதனை தினமும் உட்கொள்ளலாம்.

* தூக்கமின்மை கோளாறுகளை சரி செய்ய தினமும் வால்நட் சாப்பிட வேண்டும். நாள்தோறும் இரவில் தூங்குவதற்கு முன் பாலில் வால்நட் சேர்த்து குடித்தால் ஆழ்ந்த உறக்கம் வரும்.
* காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க வால்நட் பெரிதும் உதவுகிறது. இதில் கெட்ட கொழுப்புகள் இல்லை என்பதால் உடலுக்கு தேவையான புரதம் கிடைக்கும்.

* தலைமுடி பிரச்சனை உள்ளவர்கள் இதனை உட்கொள்வதால் தலைமுடி உதிர்வு குறைந்து நன்கு முடி வளரும். மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்றவற்றை வால்நட் குணப்படுத்தும்.
* பித்தப்பையில் கல் இருப்பவர்கள் இந்த பருப்பை ஊறவைத்து சாப்பிடலாம். அவ்வாறு சாப்பிட்டால் பித்தப்பையில் உள்ள கற்கள் மெல்ல மெல்ல கரைந்து வெளியேறிவிடும்.
English Summary
walnuts benefits in tamil