வலிப்பு நோயின் வகைகள்...! தெரிந்து கொள்வோமா...?
Types of epilepsy Lets find out
வலிப்பு நோயின் வகைகள்
மேலோட்டமாக இவற்றை இருவகைப் படுத்தலாம்.
முதலாவது பகுதி (Partial) வலிப்பு
இரண்டாவது பொது(General) வலிப்பு.

பொதுவலிப்பு :
பகுதி வலிப்பில் மூளையின் ஒரு பகுதி மட்டும் பாதிக்கப்படும். அப்பகுதியினால் இயக்கப்படும் உறுப்புகள் வலிப்புக்கு உள்ளாகும். கை, கால், வாய் இவற்றைக் கட்டுப் படுத்தும் மூளையின் பகுதியில் வலிப்பு ஏற்பட்டால் அந்த உறுப்புகள் மட்டும் பாதிக்கப்படும்.
பகுதி வலிப்பு:
பொதுவலிப்பு மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் பாதிக்கப்படுவதால் உண்டாவதாகும். இதிலும் இருவகைகள் உள்ளன. பெடிட்மால், கிராண்ட்மால் என இவ்விரு வகைகளும் அழைக்கப்படுகின்றன.
பெடிட்மால் மிகச் சிறிய அளவில் தோன்றி மறையும் ஒரு வலிப்பாகும். சில சமயம் இது கண்டுகொள்ளப்படாமலேயே வந்து போகலாம். இது ஒரு நொடியிலிருந்து பத்து முதல் இருபது நொடிகள் வரை நீடிக்கலாம்.
கிராண்ட்மால் தாக்கியவர் முதலில் கண் முன் ஒரு பிரகாசமான காட்சி தோன்றுவது போல உணர்வார். கை கால்கள் உதறிக் கொள்ளும். பின், சுய நினைவின்றி மயங்கி விழுவார். மலம், சிறுநீர் போன்றவை அவரது கட்டுப்பாட்டில் இல்லாமல் பிரிய நேரலாம்.
English Summary
Types of epilepsy Lets find out