தும்பைப்பூ பற்றி பலரும் அறிந்திராத தகவல்.! - Seithipunal
Seithipunal


தும்பைப்பூ வின் நன்மைகள்:

தும்பைப்பூ அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. காணும் இடம் எங்கும் சாலையோரங்களில் மலர்ந்திருக்கும் வெண்ணிற தும்பை மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன
தும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது.

சிறிதளவு தும்பைப் பூக்களைப் பறித்து, நன்கு அலசிவிட்டு வெறும் வாயில் போட்டு மென்று தின்றால் இருமல், சளி தொல்லை உடனடியாக நீங்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும்.

சிறிதளவு தும்பைப் பூக்களை எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து சாற்றினை வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் பனங்கற்கண்டு கலந்து குடித்தால் கடுமையான நீர்க்கோவை நீங்கும்

சிறிதளவு தும்பைப் பூ தேன், மிளகுத்தூள் சேர்த்து இருநாட்களுக்கு காலையும் மாலையும் சாப்பிட அடுக்குத் தும்மல், தொண்டைக்கட்டு நீங்கும்

தும்பைப்பூ, ஏலக்காய், அக்கரகாரம் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை தேனில் குழைத்து சிறிது சிறிதாக வாயில் போட்டு வைத்திருந்தால் குரல் கம்மல், தொண்டைக்கட்டு நீங்கும்

25 தும்பை பூக்களை,காய்ச்சிய பாலில் இட்டு, ஒரு மணி நேரம் ஊற வைத்து, குழந்தைகளுக்குக் குடிக்க கொடுத்தால் அவர்களின் தொண்டை பிரச்சனை நீங்கும்

ஒரு கைப்பிடி அளவு தும்பைப்பூவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் 10 மிளகு, 100 கிராம் தேங்காய்த் துருவல், 2 பச்சை மிளகாய் எடுத்து அனைத்தையும் சிறிதளவு நெய் விட்டு வதக்கி அரைத்து தினமும் ஒருவேளை துவையலாகச் சாப்பிட்டு வந்தால் மார்பிலுள்ள சுபம் கரைந்து வெளியேறும். ஆஸ்துமா நோயும் கட்டுப்படும்

தேவையான அளவு தும்பைப் பூவையும், தும்பை இலையையும் சேகரித்து அரைத்து சிரங்கு மேலும் உடலில் அரிப்பு இருந்தால் உடல் முழுவதும் தடவிவிட்டு ஒரு மணி நேரம் ஊறவிடவேண்டும். பிறகு சுட்ட சீயக்காய் மற்றும் மஞ்சளை அரைத்து அதைத் தேய்த்துக் குளித்து வந்தால் சொறி, சிரங்கு குணமாகும்

கண் தொடர்புடைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கைப்பிடியளவு தும்பைப் பூவை சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து வதக்கி ஒரு டம்ளர் வீதம் எடுத்து தேக்கரண்டியளவு தேனும் சேர்த்து சாப்பிட்டு வர கண் நோய்கள் குணமடையும்

தலைபாரம், சீதளம் உள்ளவர்கள் தும்பைப்பூவுடன் குறைந்த அளவில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து சுடுநீரில் குளித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்

ஜலதோஷம், இருமலால் அவதிப்படுபவர்கள் தும்பைப்பூவை நீர்விட்டு கொதிக்க வைத்து, அதன் சாறை குடித்தால் பிரச்னை சரியாகும். தலைவலி, தலைபாரம் உள்ளவர்கள் தும்பைப்பூவை பசும்பால் விட்டு அரைத்து நெற்றியில் பூசினால் நிவாரணம் கிடைக்கும்

 தீராத தலைவலி உள்ளவர்கள் தும்பைப்பூவை கசக்கி இரண்டு சொட்டு மூக்கில் வைத்து உள்ளே இழுத்தால் உடனடித் தீர்வு கிடைக்கும்.

சளியினால் மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருக்கும் நிலையிலும் தும்பைப்பூ, இலை, சமஅளவு எடுத்து கசக்கி அதில் சாறு எடுத்து 2 துளிகள் தினமும் இருவேளை மூக்கில் விட எளிதில் குணம் தெரியும்

கால் டீஸ் பூன் அளவு மிளகை பொன் வறுவலாக வறுத்து எடுத்து அத்துடன் ஒரு டீஸ்பூன் அளவு தும்பைப்பூவும், சிறிதுவெல்லமும் சேர்த்து லேகியம் போல செய்து தினம் இருவேளை சாப்பிட குளிர் ஜுரம், வாதஜுரம் குணமடையும்

காய்ச்சலுக்கும் தும்பைப்பூ நல்ல மருந்தாகிறது. தும்பைப்பூவுடன் சம அளவு மிளகு சேர்த்து மையாக அரைத்து சிறுசிறு உருண்டைகளாக்கி நிழலில் காய வைத்துக்கொள்ளுங்கள். நிலவேம்பு கஷாயத்தில் இந்த உருண்டையில் ஒன்றை எடுத்து கலந்து உள்ளுக்கு சாப்பிட்டால், காய்ச்சல் உடனே நிற்கும். இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் காலகட்டத்தில் மட்டும் உணவில் உப்பு, புளி, அசைவ உணவுகள் சேர்க்கக் கூடாது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thumbai flower benefites


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->