மருத்துவ குணங்கள் நிறைந்த 'திப்பிலி' எதற்கெல்லாம் பயன்படுகிறது? வாங்க பார்க்கலாம்.!
Thippili health benefits in tamil
இருமல், வாயு தொல்லை, முப்பினி நீங்க திப்பிலி பொடியை பசும்பாலில் கலந்து காய்ச்சி அருந்து வேண்டும். திப்பிலி பொடியை வெல்லம் கலந்து பருகுவதால் விந்தணு பெருகும். நெய்யுடன் கலந்து சாப்பிடுவதால் ஆண்மை அதிகரிக்கும்.
திப்பிலியை வறுத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து இரண்டு வேளை சாப்பிடுவதால் தொண்டை புண், இருமல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு போன்றவை குணமடையும். மேலும் இரைப்பை கல்லீரல் போன்றவை வலுப்பெறும்.

திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்து வறுத்து பொடி செய்து மூன்று வேலை சாப்பிடுவதால் வயிற்று வலி வயிற்றுப் பொருமல் நீர் கோவை போன்றவை குணமடையும். திப்பிலியை இடித்து பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேன் கலந்து இரண்டு வேளை சாப்பிடுவதால் கபம், வாயு தொல்லை நீங்கும்.
செரிமான பிரச்சனை குணமடைந்து மலச்சிக்கல் வராது. திப்பிலி, கரிசலாங்கண்ணி இரண்டையும் தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை தொடர்ந்து குடித்து வர உடல் களைப்பு நீங்கி ஆரோக்கியமும் சுறுசுறுப்பும் மேம்படும்.

திப்பிலி, தேற்றான் விதை சேர்த்து பொடி செய்து கழுநீரில் போட்டு ஏழு நாட்கள் காலையில் குடித்து வந்தால் வெள்ளை, பெரும்பாடு நீங்கும். திப்பிலி பொடி, கடுக்காய் பொடி சம அளவு எடுத்து தேன் கலந்து நன்கு பிசைந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் இளைப்பு நோய் குணமடையும்.
English Summary
Thippili health benefits in tamil