முட்டையின் ரகசியம் வெளிச்சம்: வெள்ளைக்கருவா… மஞ்சள் கருவா…! - ஆரோக்கியத்திற்கு உண்மையான ஹீரோ யார்?
secret egg revealed egg white or yolk Who real hero your health
முட்டையின் வெள்ளைக்கரு பெரும்பாலும் நீரால் ஆனது. இதில் சுமார் 90% நீரும், 10% புரதமும் உள்ளது. கலோரிகள் மிகவும் குறைவு (சுமார் 17 கலோரிகள்) என்பதால் உடல் எடையை கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு இது ஏற்றதாகும். ஆனால், இதில் ஏ, டி, இ, கே போன்ற முக்கிய வைட்டமின்களும், கொழுப்புகளும் இல்லை. அதே நேரத்தில் சோடியம் அளவு சற்றே அதிகமாக காணப்படுகிறது.

இதற்கு மாறாக, முட்டையின் மஞ்சள் கரு உண்மையான ஊட்டச்சத்து களஞ்சியம். இதில் சுமார் 17% புரதம், ஏ, டி, இ, கே, பி12 உள்ளிட்ட பல வைட்டமின்கள், இரும்பு, துத்தநாகம் போன்ற அவசியமான தாதுக்கள் மற்றும் உடலுக்கு நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. ஒரு மஞ்சள் கருவில் சுமார் 50 கலோரிகள் இருப்பதால், இது சக்தி தரும் உணவாக விளங்குகிறது.
எது சிறந்த தேர்வு?
முழுமையான, சமநிலையான ஊட்டச்சத்தை விரும்புவோருக்கு வெள்ளைக்கருவும் மஞ்சள் கருவும் சேர்ந்த முழு முட்டையே சிறந்தது. குறிப்பாக, உடலுக்குத் தேவையான பல முக்கிய ஊட்டச்சத்துகளை மஞ்சள் கரு தனியாகவே வழங்கக்கூடிய திறன் கொண்டது.ஆனால், கலோரிகள் மற்றும் கொழுப்பு அளவை குறைக்க நினைப்பவர்கள் வெள்ளைக்கருவை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். அதே நேரத்தில், மூளை ஆரோக்கியம், கண் பார்வை, தசை வளர்ச்சி போன்றவற்றிற்கு மஞ்சள் கரு மிகச் சிறந்த தேர்வாகும்.அதனால், உங்கள் உடல் தேவைக்கேற்ற வகையில் முட்டையைச் சேர்த்துக்கொள்வதே புத்திசாலித்தனமான முடிவாகும்.
English Summary
secret egg revealed egg white or yolk Who real hero your health