கொய்யாப்பழத்தில் எது சிறந்தது - சிவப்பா?.. வெள்ளையா?.
red guava and white guava which best
பழ வகைகளில் ஒன்றான கொய்யாப்பழத்தில் இரண்டு வகை உள்ளது. ஒன்று சிவப்பு. மற்றொன்று வெள்ளி. இதில் எந்த கொய்யாபழம் சிறந்தது என்று இந்தப் பதிவில் காண்போம்.
வெள்ளை கொய்யா
வெள்ளை கொய்யா சற்று இனிப்புச் சுவை கொண்டது. அதிகளவில் விதைகளும், சர்க்கரை, ஸ்டார்ச் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்டவைகளும் இருக்கும். இதன் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
* ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* செரிமானத்தை துரிதப்படுத்தும்.
* உடல் எடை இழப்பை ஊக்குவிக்கும்.
* சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
* ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும்.
* மாதவிடாய் வலியை கட்டுப்படுத்தும்.
* புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது.

சிவப்பு கொய்யா
சிவப்பு கொய்யா அதிக நீர் உள்ளடக்கம் கொண்டிருக்கும். ஆனால் சர்க்கரை, ஸ்டார்ச் மற்றும் வைட்டமின் சி குறைவாக இருக்கும். இதன் நன்மைகளை இங்குக் காண்போம்.
* இதில் இருக்கும் அதிக லைகோபீன் இதயத்தைப் பாதுகாக்க உதவிடும்.
* சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* வைட்டமின் ஏ, ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
* நார்ச்சத்தும் நிறைந்தது. செரிமானம் மற்றும் உடல் எடையை நிர்வகிக்க துணைபுரியும்.
* இதில் சர்க்கரை குறைவாக இருக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.
இந்த இரண்டு பழத்தில் எது சிறந்தது?
இரண்டு கொய்யா ரகங்களும் ஆரோக்கியமானவை. இருப்பினும், அதிக ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் ஏ, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து காரணமாக சிவப்பு கொய்யா முதலிடத்தை பெறுகிறது.
English Summary
red guava and white guava which best