மருத்துவப் படிப்புக்கான ரேங்க் லிஸ்ட் இன்று பிற்பகல் வெளியீடு! கலந்தாய்வு எப்போது...? வெளியான முக்கிய அப்டேட்...!
rank list for medical studies will be released this afternoon When will counselling be held Important update released
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக காத்திருக்கும் மாணவ-மாணவிகளின் எதிர்பார்ப்புக்கு இன்று விடை கிடைக்க உள்ளது. நடப்பாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் இன்று பிற்பகல் வெளியிடப்பட உள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 13,999 எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்கள் உள்ளன.

இவற்றில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நடத்தி வருகிறது.நடப்பாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்பதற்கான இணையவழி விண்ணப்ப பதிவு அண்மையில் நிறைவடைந்தது.
நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்த நிலையில், மொத்தம் 72,627 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.விண்ணப்பங்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்களின் கல்வித் தகுதி, நீட் தேர்வு மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டன.
தரவரிசை பட்டியல் எப்போது வெளியாகும், மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்புடன் மாணவ-மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் காத்திருந்தனர்.
இந்த நிலையில், விண்ணப்ப பரிசீலனை பணிகள் நிறைவடைந்துள்ளதால், நடப்பாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் இன்று பிற்பகல் வெளியிடப்பட உள்ளது.
இதனுடன், கலந்தாய்வு தொடங்கும் தேதி, விண்ணப்பிக்கும் நடைமுறைகள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் அடங்கிய அட்டவணையும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தரவரிசை பட்டியல் வெளியானதும் மாணவர்கள் தங்களது இடத்தை அறிந்து கொண்டு, அடுத்தகட்ட மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
English Summary
rank list for medical studies will be released this afternoon When will counselling be held Important update released