மருந்தகங்களில் விற்கப்படும் 'ORS' பானங்கள் உண்மையில் மருந்துதானா...? - பொதுமக்களுக்குச் சுகாதாரத் துறை விடுத்த முக்கிய அறிவுறுத்தல்
ORS drinks sold pharmacies actually medicines Key advisory issued public by Health Department
உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பைத் தடுக்க உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட ஓஆர்எஸ் (ORS) கரைசல் மட்டுமே சிறந்தது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வயிற்றுப்போக்கு மற்றும் அதிக வியர்வை காரணமாக உடலில் இருந்து வெளியேறும் குளுக்கோஸ் மற்றும் அத்தியாவசிய தாது உப்புகளை ஈடுகட்ட இந்த உப்பு-சர்க்கரை கரைசல் முக்கியப் பங்கு வகிக்கிறது.
உரிய நேரத்தில் இதனை எடுத்துக்கொள்ளாவிட்டால் உள் உறுப்புகள் பாதிப்பு அல்லது உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
சரியான ஓஆர்எஸ் கரைசலில் 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 13.5 கிராம் குளுக்கோஸ் உள்ளிட்ட அத்தியாவசிய தாதுக்கள் சரியான விகிதத்தில் உள்ளன.
இதனை ஒரு லிட்டர் காய்ச்சி ஆறவைத்த நீரில் கலந்து 24 மணி நேரத்திற்குள் பருக வேண்டும்.
தற்போது சந்தையில் திரவ நிலையில் விற்கப்படும் பல்வேறு பானங்கள் புத்துணர்ச்சியை மட்டுமே தரக்கூடியவை; அவை மருத்துவ ரீதியாக நீர்ச்சத்து இழப்பைச் சரிசெய்யாது.
அங்கீகரிக்கப்பட்ட ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவும், மருந்தகங்களில் குறைந்த விலையிலும் கிடைக்கின்றன.
English Summary
ORS drinks sold pharmacies actually medicines Key advisory issued public by Health Department