நீட் மறுதேர்வு: தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ள ‘அல்டிமேட்’ வாய்ப்பு...! - தேசிய தேர்வு முகமை அதிரடி - Seithipunal
Seithipunal


இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 3-ஆம் தேதி நாடு முழுவதும் பரபரப்பான சூழலில் நடைபெற்றது. இந்தத் தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக வெளியாகிய தகவல் நாடு தழுவிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தேசிய தேர்வு முகமை தேர்வை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

முறைகேட்டில் தொடர்புடையவர்களை கண்டறியும் பணியில் சி.பி.ஐ. காவலர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனிடையே நீட் மறுதேர்வு வருகிற ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில், நாட்டின் பல்வேறு நகரங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் தேர்வர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில், தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ளும் இணையவழி சேவையை தேசிய தேர்வு முகமை திறந்துள்ளது.

வருகிற 21-ஆம் தேதி இரவு 11.50 மணி வரை இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. தேர்வு மைய மாற்றத்திற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஹால்டிக்கெட் தொடர்பான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பின்னர் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தேர்வர்களுக்கு வழங்கப்படும் அனுமதி அட்டையில் தேர்வு மைய விவரங்கள் முழுமையாக இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கூடுதல் தகவல்களை தேர்வர்கள் neet.nta.nic.in மற்றும் nta.ac.in இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NEET re examination Ultimate opportunity change examination center National Examinations Agency takes action


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->