உங்க லஞ்ச் பாக்ஸுல தயிர் சாதமா.?! உஷார்.. இதை கொஞ்சம் கவனிங்க.!
make some awareness about Curd rice
பலரது அவசர லஞ்ச் பாக்ஸ்க்கு உதவும் உணவு என்றால் அது தயிர் சாதம் தான். கொஞ்சம் சாதம் குக்கரில் வைத்து பிரிட்ஜில் இருக்கும் தயிரை எடுத்து ஊற்றி உப்பு போட்டு கலந்தால் தயிர் சாதம் ரெடி.
அவசர அவசரமாக அலுவலகம் செல்பவர்களுக்கு இது பெரிய அளவில் கை கொடுக்கிறது. ஆனால் சூடான சாதத்தில் குளிர்ச்சியான தயிரை கலப்பது மிகப்பெரிய ஆபத்து என்பது தெரியுமா.?
எந்த ஒரு சூடான பொருளுடனும் குளிர்ச்சியான பொருளை உடனே சேர்க்கும்போது உடல் உபாதை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இப்படி இருக்க சுட சுட சாதத்தை வடித்து அதை தட்டில் போட்டு ஆற வைக்காமல் அப்படியே குளிர்ச்சியான தயிர் அல்லது மோரை கலந்து சாப்பிடுவது மிகவும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
சாதத்தை எப்போதும் செய்தவுடன் தட்டி போட்டு நன்றாக ஆற விட வேண்டும். அதன் பின்னர் பிரிட்ஜில் இருந்து தயிர் அல்லது மோரை எடுத்து அதை குளிர்ச்சியுடன் சேர்க்காமல் அதையும் சற்று நேரம் வெளியில் வைத்திருந்து குளிர்ச்சி குறைந்தவுடன் ஆரிய சாதத்தில் சேர்த்து கிளறி சாப்பிடுவது நல்லது.
சூடான சாதத்தில் தயிரை கலந்து சாப்பிட்டால் பேதி, வாந்தி, செரிமான கோளாறு மற்றும் வாய் பிடிப்பு உள்ளிட்டவை ஏற்படக்கூடும்.
English Summary
make some awareness about Curd rice