ஆஸ்துமா நோயாளிகள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய உணவு பட்டியல்...! - Seithipunal
Seithipunal


உணவு முறைகள் : 
சேர்க்கவேண்டிய உணவுகள் :
எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவையே ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிட வேண்டும். அதாவது இட்லி, இடியாப்பம், புட்டு, ஆப்பம் போன்ற ஆவியில் வெந்த உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது. 
ஆஸ்துமா நோயாளிகள் பகல் நேரத்தில் மட்டும் மோர் சாதம் சாப்பிடலாம். மோரில் கொஞ்சம் மிளகைக் கலந்து சாப்பிட வேண்டும்.
வயிற்றுப் புண் பிரச்சினை உள்ள நோயாளிகள் மிளகுக்குப் பதிலாக மஞ்சள்தூள் கலந்த மோரை ஊற்றி பகலில் சாதம் சாப்பிடலாம்.


உலர் கொடி முந்திரியுடன் சில வகை உலர் பழ வகைகளை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
முசுமுசுக்கைக் கீரை மிகவும் நல்லது.
வேகவைத்த காய்கறிகளுடன் கோதுமை ரொட்டி அல்லது சப்பாத்தியை மதிய உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
சமைக்கப்படாத காய்கறிகளால் ஆன சாலட் வகைகளை இரவு நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம். 
இரவு உணவை உரங்கச் செல்வதற்கு 2 மணி நேத்திற்கு முன்பு எடுத்துக் கொள்ளவும்.
ஆஸ்துமா நோயாளிகள் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பும் காலையில் எழுந்தவுடனும் தண்ணீர் குடிப்பது அவசியம்.

தவிர்க்கவேண்டிய உணவுகள் :
பரோட்டா, பிரியாணி போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
ஐஸ்கிரீம் உள்பட நீர்ச்சத்து மிகுந்த வௌ;ளரிக்காய், பூசணி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
எலுமிச்சை, ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
பால், வெண்ணெய், நெய் உள்பட கொழுப்புச் சத்து மிகுந்த உணவுப் பொருள்களைத் தவிர்ப்பது அவசியம்.
வாயுக் கோளாறைத் தவிர்க்க உருளைக் கிழங்கு உள்பட கிழங்கு வகைகளை உணவில் தவிர்ப்பது அவசியம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை கைவிடுவது நல்லது.
முதல் சில தினங்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

List of foods that asthma patients must know


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->