நடந்தாலே முட்டி வலி.. மூச்சு வாங்கல்.. இதை செய்தால்.. இனி உங்கள் பக்கம் வராது..! - Seithipunal
Seithipunal


இன்றைக்கு சில அடி தூரம் நடந்தாலே, பலருக்கும் முட்டி வலிக்கிறது; மூச்சு வாங்குகிறது. ஆனால், எந்த வாகன வசதியுமே இல்லாத அந்தக் காலத்தில் பல மைல் தூரத்தை நடந்தே கடந்து சென்றவர்கள் நம்முடைய முன்னோர். ஆரோக்கியமான உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்ததுதான் அதற்கான காரணம். மறந்துபோன மருத்துவ உணவுகளில் ஒன்று இதோ..

ஆவாரம்பூ கஷாயம்:-

தேவையானவை: 

ஆவாரம்பூ - 100 கிராம், 

சுக்கு - ஒரு துண்டு, 

ஏலக்காய் - 20, 

உலர்ந்த வல்லாரை இலை - 100 கிராம், 

சோம்பு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: 

மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும். தேவையானபோது அதில் கையளவு எடுத்து, அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கால் லிட்டராக ஆகும் வரை சுண்டக் காய்ச்சவும். அதை வடிகட்டி, தேவையான அளவு பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.

மருத்துவப் பயன்: சர்க்கரை நோய்க்கு கைகண்ட மருந்து. சிறுநீர்க் கோளாறுகளை நிவர்த்தி செய்யும். இதய நோய், வாய்ப்புண், சரும நோய்களைப் போக்கும் ஆற்றல்கொண்டது. உஷ்ணத்தைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

leg join pain solution


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->