காலையில் டீ காப்பிக்கு பதிலாக இந்த வடிநீர் குடியுங்கள்..! - Seithipunal
Seithipunal


பெரும்பாலானோருக்கு காலையில் காப்பி அல்லது டீ இல்லை என்றால் நாள் முழுமனதுடன் ஆரம்பிக்காது. ஆனால், தற்போது டீ காப்பிக்கு மாற்றாக பல மூலிகை டீக்கள் உள்ளன. தற்போது கற்பூரவல்லி டீ எப்படி செய்வது என பார்போம்.

தேவையான பொருட்கள்:

கற்பூரவல்லி இலைகள் - கைப்பிடி

துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
டீத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு அல்லது தேன் – தேவைக்கு

செய்முறை:

கற்பூரவல்லி இலைகளை நன்றாக கழுவி கொள்ளவும். ஒருபாத்திரத்தில் ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் நறுக்கிய கற்பூரவல்லி இலைகள், துருவிய இஞ்சி, டீத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்ததும் அதில்  உங்கள் தேவைகேற்ப பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து பருகவும்.

கற்பூரவல்லியில் உள்ள நன்மைகள்:

இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமி சி அதிக அளவில் உள்ளது.  கற்பூரவல்லி இலைகளில் தினமும் இரண்டு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karpooravalli tea


கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?Advertisement

கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?
Seithipunal