மலட்டுத்தன்மைக்கு முடிவா...? -மனித தோல் செல்களில் இருந்து கருவை உருவாக்கிய விஞ்ஞானிகள்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க விஞ்ஞானிகள் மனித இனப்பெருக்கத்தில் புரட்சிகரமான முன்னேற்றத்தை சாதித்துள்ளனர். அவர்கள், மனித தோல் செல்களில் இருந்து டிஎன்ஏ எடுத்து, விந்தணுவுடன் சேர்த்து கருவை உருவாக்கியுள்ளனர்.

இது உலகில் முதல் முறை.இந்த புதுமையான முறையால், உடலின் எந்த செல்லையும் பயன்படுத்தி குழந்தையை உருவாக்க முடியும். இதனால் மலட்டுத்தன்மை, வயது, நோய் போன்ற காரணங்களால் குழந்தை பெற முடியாதவர்களுக்கு புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது. மேலும், தன்பாலின தம்பதிகளுக்கும் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தை பெறும் வாய்ப்பு திறக்கப்படுகிறது.

மேலும், ஓரிகன் சுகாதார மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஷௌக்ரத் மிட்டாலிபோவ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு, ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ இதழில் வெளியானது. அவர்கள் 82 செயற்கை கருமுட்டைகளை உருவாக்கியதாக தெரிவித்துள்ளனர்; சில கருவாக வளர்ந்தாலும், 6 நாட்களுக்கு மேல் வளரவில்லை.

இதில் மிட்டாலிபோவ் தெரிவித்ததாவது,"சாத்தியமற்றது என்று கருதப்பட்டதை நாங்கள் சாத்தியமாக்கியுள்ளோம். இது இன்னும் தொடக்கநிலை தான், ஆனால் எதிர்காலத்தில் உலகம் முழுக்க குழந்தை பெற முடியாதோருக்கு நம்பிக்கை அளிக்கும்" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் “இனப்பெருக்கத்தின் புதிய யுகத்தின் தொடக்கம்” என பாராட்டியுள்ளதுடன், இதுபோன்ற ஆராய்ச்சிகள் குறித்து பொதுமக்களுடன் திறந்த விவாதம் அவசியம் என்றும் வலியுறுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is there an end to infertility Scientists create embryos from human skin cells


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->