இதயநோயாளிகள் பச்சை வாழைப்பழத்தை சாப்பிடலாமா.?!  - Seithipunal
Seithipunal


பச்சை வாழைப்பழம் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது. பச்சை வாழைப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் போன்ற பாதிப்புகளிலிருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.

இதில் வைட்டமின் B6 நிறைந்துள்ளது. மேலும் ஹீமோகுளோபின் உருவாவதற்கு வைட்டமின் B6 மிகவும் அவசியமான ஒன்றாகும்.

வைட்டமின் B6 இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் சீரான பற்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

பச்சை வாழைப்பழத்திற்கு குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களை விரைவில் வளரச் செய்து புண்களை ஆற்றிவிடும் தன்மை உண்டு. எனவே இதை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள எளிய வழி பச்சை வாழைப்பழம் என்றே கூறலாம். ஏனெனில் பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிக அளவில் உள்ளதால், இது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும்.

சூடாக்கிய 1 கப் பச்சை வாழைப்பழத்தில் 3.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. எனவே இதனை உணவாக எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை சுலபமாக குறைக்க முடியும்.

இதய நோயாளிகளுக்கும் இந்த பச்சை வாழைப்பழம் சிறந்தது. பச்சை வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. ஒரு கப் பச்சை வாழைப்பழத்தில் 531 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது.

எனவே இதயநோயாளிகள் இதனை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

is heart patient eat green banana


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->